News August 26, 2025

கள்ளக்குறிச்சி கால்வாய் பிரச்னையில் கொலை மிரட்டல்

image

எடுத்தவாய்நத்தத்தை சேர்ந்த கோபிநாத், திருமால் இருவரும் பக்கத்து வீட்டுக்காரர்கள். கோபிநாத் மனைவி சுந்தரி வீட்டின் முன்பு கழிவுநீர் கால்வாயில் இருந்த வாட்டர் பாட்டில், குப்பைகளை அகற்றும் போது திட்டியதாகவும், இதனை கேட்ட திருமால், திருநாவுக்கரசு, மாயகிருஷ்ணன், நைனாம்மாள் ஆகியோர் சேர்ந்து கோபிநாத்தை கல்லால் அடித்து கொலைமிரட்டல் விடுத்தனர். இது குறித்த புகாரில் நேற்று 4பேர் மீது வழக்குபதிந்தனர்.

Similar News

News August 26, 2025

கள்ளக்குறிச்சி: உடனடி தீர்வு எல்லாமே ஈஸி!

image

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் “உங்களுடன் ஸ்டாலின்” திட்ட முகாம்கள் நடைபெறுகின்றன. இதில், சாதி சான்றிதழ், பட்டா மாற்றம், மகளிர் உரிமைத் தொகை, மருத்துவ காப்பீட்டு அட்டை, ஆதார், ரேஷன் அட்டை திருத்தங்கள் மேற்கொள்ளப்படுகின்றன. அரசு அலுவலகங்களுக்கு அலையாமல், இந்த <>லிங்கில் கிளிக்<<>> செய்து சிறப்பு முகாம்கள் நடைபெறும் இடங்கள் குறித்து தெரிந்துகொண்டு, நேரில் சென்று விண்ணப்பித்து பயன் பெறுங்கள். SHARE பண்ணுங்க.

News August 26, 2025

பெண்ணை தற்கொலைக்கு தூண்டியவர்கள் மீது வழக்கு

image

நிதி நிறுவனத்தில் ₹40,000 கடன் வாங்கிய சுமித்ரா, 8 மாத தவணைகள் செலுத்திய பிறகு மீதி தொகையை செலுத்தவில்லை. இதனால் கடன் பெற்றுத் தந்த ரூபினா மற்றும் சரஸ்வதி ஆகிய இருவரும் சுமித்ராவிடம் பணத்தை திரும்ப கேட்டனர். மனமுடைந்த சுமித்ரா, வீட்டில் இருந்த பூச்சி மருந்தைக் குடித்து மயங்கி விழுந்தார். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் அளித்த புகாரின் பேரில், நேற்று இருவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

News August 26, 2025

கள்ளக்குறிச்சி ஆட்சியர் மாணவர்களுக்கு அறிவுரை

image

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் அரசு பள்ளிகளில் பயிலும் அனைத்து மாணவ, மாணவிகளும் நன்கு படித்து, நமது மாவட்டத்திற்கு பெருமை சேர்க்க வேண்டும் என, மாவட்ட ஆட்சித் தலைவர் எம்.எஸ்.பிரசாந்த் தெரிவித்துள்ளார். மேலும், தமிழ்நாடு அரசின் சார்பில் பள்ளிக் கல்வித்துறையில் பல்வேறு சிறப்பு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருவதாகவும் அவர், தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!