News August 26, 2025
காஞ்சிபுரத்தில் காலை உணவு திட்டம் விரிவாக்கம் தொடக்கம்

முதலமைச்சரின் காலை உணவு திட்டத்தின் கீழ் அரசு பள்ளிகள் காலை உணவு நாள்தோறும் மாணவர்களுக்கு வழங்கப்படுகிறது. முதலில் மாநகராட்சிகளில் தொடர்ந்து தற்போது அனைத்து பகுதிகளிலும் செயல்பட்டு வரும் நிலையில், தற்போது அரசு நிதி உதவி பெறும் பள்ளிகளிலும் இதன் விரிவாக்கம் இன்று (26.08.2025) முதல் செய்யப்பட்டுள்ளது. அவ்வகையில் 20 பள்ளிகளில், 871 மாணவர்களும் 1499 மாணவிகளும் என மொத்தம் 2370 பேர் பயன் பெறுகின்றனர்.
Similar News
News August 27, 2025
காஞ்சியில் தொந்தியில்லா விநாயகர்!

காஞ்சிபுரம் ஏகாம்பரேஸ்வரர் கோயிலில் உள்ள விநாயகர் சிலையின் மீது காதை வைத்துக் கேட்டால், ‘ஓம்’ என சத்தம் கேட்கும் என்பது மக்களின் நம்பிக்கை. இங்கு பிள்ளையார், தொந்தி இல்லாமல் காட்சியளிப்பதால் ‘வயிறு தாரி பிள்ளையார்’ எனவும் அழைக்கப்படுகிறார். விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு இந்த தலத்தில் காலை 10 முதல் 12.30 மணி வரையில் பூஜை செய்தால் புண்ணிய பலன்கள் பெருகும் என்பது நம்பிக்கை. ஷேர் பண்ணுங்க!
News August 27, 2025
இந்த விநாயகர் சதுர்த்தியை way2news உடன் கொண்டாடுங்கள்

உங்கள் பகுதியில் வைத்திருக்கும் வண்ண வண்ண விநாயகர் சிலையை ஊர் அறிய செய்ய அருமையான வாய்ப்பு. அலங்கரித்து வைப்பட்டுள்ள விநாயகர் சிலையை தெளிவாக புகைப்படம் எடுத்து நம்ம way2newsல் பதிவிடுங்கள். எப்படி பதிவிடுவது என்பதை <
News August 27, 2025
காஞ்சிபுரம் மாவட்ட இரவு ரோந்து போலீசார் விவரம் வெளியீடு

காஞ்சிபுரம் மாவட்டத்தில் இன்று (26.08.2025) இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைப்பேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.