News August 26, 2025
தூத்துக்குடி காவல்துறை சார்பில் புதிய கைப்பந்து மைதானம்

தூத்துக்குடி மாவட்ட காவல்துறை சார்பாக புதிதாக அமைக்கப்பட்ட கைப்பந்தாட்ட அரங்கத்தை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார். தூத்துக்குடி வடபாகம் காவல் நிலைய முன்பாக உள்ள மைதானத்தில் காவல்துறை பாய்ஸ் அன்ட் கேர்ள்ஸ் கிளப்-ன் மாணவ மாணவிகளுக்கு பயன்படும் வகையில் இதனை காவல் உதவி கண்காணிப்பாளர் திறந்து வைத்தார்.
Similar News
News August 26, 2025
தூத்துக்குடியில் இலவச வீட்டு மனை வேண்டுமா?

தூத்துக்குடி மக்களே தமிழக அரசால் ‘இலவச வீட்டு மனை வழங்கும் திட்டம்’ செயல்படுத்தப்படுகிறது. 10 ஆண்டுகளாக ஒரே ஊரில் வசிக்கும் நிலம் இல்லாதவர்களுக்கு இலவச வீட்டு மனை வழங்கப்படுகிறது. இதுபற்றி உங்கள் பகுதி VAO விடம் கேட்டறிந்து, கலெக்டர் அலுவலகம் அல்லது வட்டாசியர் அலுவலகத்திற்கு சென்று விண்ணப்பிக்கலாம். இந்த நல்ல தகவலை நண்பர்களுக்கு SHARE பண்ணி உதவுங்க.
News August 26, 2025
தூத்துக்குடி: மகளிர் உரிமைத் தொகையில் புகாரளிக்கலாம்

தூத்துக்குடி மக்களே, வறுமை கோட்டிற்கு கீழே இருக்கும் தகுதி வாய்ந்த மகளிர் தேர்வு செய்யப்பட்டு அரசு மூலம் மாதந்தோறும் ரூ.1000 கொடுக்கப்படுகிறது. இந்நிலையில் தகுதி அல்லாதவர்கள் மகளிர் உரிமை தொகை பெற்றுக் கொண்டிருப்பது உங்களுக்கு தெரிந்தால்<
News August 26, 2025
கோவில்பட்டி: பட்டாசு தயாரித்த 3 பேர் கைது

தூத்துக்குடி மாவட்டம் கழுகுமலை ஆறுமுகம் நகர் பகுதியில் அனுமதியின்றி வீட்டில் வைத்து பட்டாசு திரி தயாரிப்பதாக கழுகுமலை காவல் நிலைய போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதனை தொடர்ந்து அங்கு சென்ற காவல்துறையினர் வீடு வீடாக சோதனையில் ஈடுபட்டனர். அதில் ஒரு வீட்டில் அனுமதியின்றி பட்டாசு திரி தயாரிப்பது தெரிய வந்தது. இதையடுத்து சண்முகசுந்தரம், செந்தில்குமார், செல்வி ஆகிய 3 பேரை போலீசார் கைது செய்தனர்.