News April 9, 2024

திமுகவிற்கு வணிகர் சங்கங்கள் ஆதரவு

image

வணிகர் சங்கங்கள் பேரமைப்பின் தலைவர் விக்கிரமராஜா மக்களவைத் தேர்தலில் திமுக கூட்டணிக்கு ஆதரவு தெரிவித்துள்ளார். ஏப்ரல் 19இல் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், திமுக மற்றும் அதிமுகவிற்கு பல அமைப்புகள் ஆதரவு தெரிவித்து வருகின்றன. அந்தவகையில், முதல்வர் ஸ்டாலினை நேரில் சந்தித்த விக்கிரமராஜா, தங்கள் கோரிக்கைகளை தேர்தல் அறிக்கையில் சேர்த்ததற்கு நன்றி கூறி, I.N.D.I.A கூட்டணிக்கு ஆதரவும் தெரிவித்தார்.

Similar News

News February 17, 2026

திமுக MP-யிடம் வேதனைப்பட்ட செங்கோட்டையன்!

image

துரோகத்தின் மொத்த உருவம் EPS தான் என திமுக MP செல்வகணபதி விமர்சித்துள்ளார். சேலத்தில் பேசிய அவர், பார்லிமெண்ட் தேர்தலில், தான் ஜெயிக்க கூடாது என்பதற்காக எந்த செங்கோட்டையன் வீட்டு வாசலில் காத்திருந்தாரோ, அவரையே கட்சியில் இருந்து EPS நீக்கிவிட்டார் என பேசினார். கட்சியில் இருந்து நீக்கப்பட்ட பின் தன்னை தொடர்புகொண்ட KAS, ’மாப்ள என்னையும் குத்திட்டான்யா’ என்று வேதனை தெரிவித்ததாகவும் கூறியுள்ளார்.

News February 17, 2026

உங்கள் வீட்டில் காகம் கரைகிறதா?

image

வீட்டின் மாடி (அ) பால்கனியில் காகம் கரைந்தால் என்ன அர்த்தம் தெரியுமா? காக சாஸ்திரத்தின்படி, நண்பகலில் காகம் வடக்கு, கிழக்கு திசைகளில் இருந்தபடி சத்தம் எழுப்பினால் அது மங்களகரமானதாக கருதப்படுகிறது. அப்படி நடந்தால், வீட்டிற்கு விருந்தாளிகள் வரலாம். அதேநேரம், தெற்கு திசையில் இருந்து சத்தம் எழுப்பினால், மோசமான அறிகுறியாகும். உங்கள் முன்னோர் மகிழ்ச்சியாக இல்லை; பித்ரு தோஷம் இருக்க வாய்ப்புள்ளதாம்.

News February 17, 2026

‘அச்சம் இல்லை’ என காங்., தலைமையை சீண்டிய MP

image

கூட்டணி விவகாரத்தில் தலைமையின் ஆணையை மீறி கருத்து கூறி வரும் மாணிக்கம் தாகூர் மீது நடவடிக்கை எடுக்கப் பரிந்துரைத்திருப்பதாக <<19157591>>செல்வப்பெருந்தகை<<>> கூறினார். இந்நிலையில், தனது X பக்கத்தில் ‘அச்சம் இல்லை, அச்சம் இல்லை, அச்சமென்ப தில்லையே’ என சிரிப்பு ஸ்மைலியுடன் மாணிக்கம் தாகூர் சற்றுமுன் பதிவிட்டுள்ளார். இது, வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவது போல தலைமையை சீண்டும் செயல் என சிலர் கமெண்ட் செய்து வருகின்றனர்.

error: Content is protected !!