News August 25, 2025
நாளை இந்த நேரத்தில் வீட்டை விட்டு வெளியே வராதீங்க!

ஒருபுறம் தமிழ்நாட்டில் ஒரு வாரத்திற்கு மழை நீடிக்கும் எனவும், மறுபுறம் பல மாவட்டங்களில் வெப்பநிலை 2- 3 செல்சியஸ் அதிகரிக்கும் என்றும் IMD தெரிவித்துள்ளது. நாளை முதல் 29-ம் தேதி வரை வெப்பநிலை அதிகரிக்கும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. மதுரை உள்ளிட்ட 4 இடங்களில் இன்றே வெயில் 100 டிகிரியை தாண்டி பதிவாகியுள்ளது. இதனால், நாளை முதல் காலை 11 மணி – பிற்பகல் 3 மணி வரை வெளியே செல்வதை தவிர்க்கவும்.
Similar News
News August 26, 2025
GST வரி குறைப்பு அக்.2-ல் அமல் என தகவல்

GST வரி குறைப்பு அக்டோபர் 2-ம் தேதி முதல் அமல்படுத்தப்படும் என்று மத்திய நிதி அமைச்சக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. GST கட்டமைப்பில் தற்போது 5%, 12%, 18%, 28% ஆகிய 4 அடுக்கு வரி விகிதங்கள் உள்ளன. இதை 5%, 18% என இரண்டு அடுக்காக மாற்ற மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. PM மோடி கூறியது போல் தீபாவளி பண்டிகை மக்களுக்கு இரட்டை தீபாவளியாக அமையும் என்று நிதி அமைச்சக வட்டாரங்கள் கூறுகின்றன.
News August 26, 2025
இன்றைய நல்ல நேரம்

▶ஆகஸ்ட் 26, ஆவணி 10 ▶கிழமை: செவ்வாய் ▶நல்ல நேரம்: 7:45 AM – 8:45 AM & 4:45 PM – 5:45 PM ▶கெளரி நல்ல நேரம்: 10:45 AM – 11:45 AM & 7:30 PM – 8:30 PM ▶ராகு காலம்: 3:00 PM – 4:30 PM ▶எமகண்டம்: 9:00 AM – 10:30 AM ▶குளிகை: 12:00 PM – 1:30 PM ▶திதி: அதிதி ▶சூலம்: வடக்கு ▶பரிகாரம்: பால் ▶பிறை: வளர்பிறை
News August 26, 2025
பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க

இன்று (ஆகஸ்ட் 26) பிறந்தநாள் காணும் அனைவருக்கும் வாழ்த்துகள்! பிறந்தநாளுக்கு வாழ்த்து சொல்ல விரும்புபவர்களின் போட்டோவை Email -way2tamilusers@way2news.com-க்கு அனுப்புங்க. Note: பிறந்தநாளுக்கு முந்தைய நாள் இரவு 10 மணிக்குள் வாழ்த்துகளை அனுப்பவும். முதலில் அனுப்பும் 20 நபர்களின் புகைப்படங்கள் மட்டும் இதில் இடம்பெறும். உங்கள் அன்புக்குரியவர்களை வாழ்த்துங்கள். பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க.