News August 25, 2025
தங்க நகை வாங்குவோருக்கு அதிர்ச்சி தகவல்

14 காரட், 18 காரட் தங்க நகைகளை 22 காரட் எனக் கூறி வணிகர்கள் விற்பதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. அங்கீகரிக்கப்படாத வணிகர்கள் ஹால்மார்க் முத்திரையில் மோசடி செய்கிறார்களாம். நகை வாங்குபவர்கள் BIS CARE ஆப்பில் வணிகர்களின் ரிஜிஸ்ட்ரேஷன் நம்பரை பரிசோதிப்பது நல்லது. இதன்மூலம், தரமான நகை வாங்குவதை உறுதி செய்யலாம். (14 காரட்டில் 58.5%, 18 காரட்டில் 75%, 22 காரட்டில் 91.6% தங்கம் இருக்கும்) SHARE IT.
Similar News
News August 27, 2025
பகல் 12 வரை இன்று.. முக்கிய செய்திகள்!

✪அரசியல்வாதி போல் <<17530864>>விஜய் <<>>நடக்க வேண்டும்: தமிழிசை
✪IPL-ல் இருந்து ஓய்வு அறிவித்தார் <<17531275>>அஸ்வின்<<>>
✪டிரம்ப்பின் 50% வரி <<17530648>>அமலானது<<>>.. ஸ்தம்பித்த துறைகள்
✪தங்கத்தின் <<17530907>>விலை <<>>சவரனுக்கு ₹280 உயர்ந்தது
✪கடத்தல் <<17531464>>வழக்கு<<>>.. நடிகை லட்சுமி மேனன் தப்பியோட்டம்
News August 27, 2025
BREAKING: விஜய் மீது பதிவானது முதல் கிரிமினல் வழக்கு

மதுரை மாநாட்டில் <<17484937>>தொண்டரை பவுன்சர் தூக்கி வீசிய<<>> சம்பவத்தில் விஜய் மீது முதல் கிரிமினல் வழக்கு பதிவாகியுள்ளது. தவெகவின் சரத்குமார், பெரம்பலூர் SP ஆபிஸில் கொடுத்த புகாரின் பேரில் குன்னம் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். FIR 346/2025-ல் கொலை மிரட்டல், கூட்டு தாக்குதல் உள்ளிட்ட 3 பிரிவுகள் சேர்க்கப்பட்டுள்ளன. இவ்வழக்கில் முதல் குற்றவாளியாக விஜய், மேலும், பவுன்சர்கள் 10 பேர் சேர்க்கப்பட்டுள்ளனர்.
News August 27, 2025
அனைத்து ரேஷன் கார்டுக்கு ₹5,000… வெளியான புது தகவல்

வரவிருக்கும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, தமிழகத்தில் உள்ள ரேஷன் அட்டைதாரர்களுக்கும் ₹5,000 ரொக்கப் பரிசு வழங்கத் தமிழக அரசு திட்டமிட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இதற்கான அறிவிப்பை தீபாவளி பண்டிகையின்போது முதலமைச்சர் அறிவிப்பார் என தலைமைச் செயலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இந்த அறிவிப்பு வெளியாகும் பட்சத்தில், சுமார் 2.20 கோடி ரேஷன் அட்டைதாரர்கள் பயனடைவார்கள் என கூறப்படுகிறது.