News April 9, 2024
பத்து நிமிடங்கள் முன்னதாக எழலாமே…

காலை 6 மணிக்கு எழுபவரா நீங்கள்? 5.50க்கு எழுந்து பழகுங்கள். கூடுதலாகக் கிடைக்கிற பத்து நிமிடத்தில், அமைதியான காலை நேரத்தில் உங்களின் அன்றைய வேலைக்கான ஆற்றலின் கதவுகள் அகலத் திறப்பதை உணர்வீர்கள். உங்களின் வாழ்க்கை பரபரப்பின்றி அவசரமின்றி இருக்க இந்த பழக்கம் உதவும். உங்கள் நேரம் உங்கள் பொறுப்பிலும் கண்காணிப்பிலும் இருக்கட்டும். வாழ்க்கையின் ஆக சிறந்த ரகசியம் நேரத்தை திறம்பட கையாள்வதே ஆகும்.
Similar News
News July 7, 2025
தொண்டர்கள் வெள்ளத்தில் இபிஎஸ் ரோடு ஷோ

மக்களை காப்போம்… தமிழகத்தை மீட்போம்.. என்ற பெயரில் சுற்றுப்பயணத்தை தொடங்கிய இபிஎஸ் மேட்டுப்பாளையத்தில் ரோடு ஷோ மேற்கொண்டார். சுற்றுப்பயணத்திற்கென பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட வாகனத்தில் சென்ற அவருக்கு தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். ரோடு ஷோவில் பாஜக சார்பில் மாநில தலைவர் நயினார் நாகேந்திரன், மத்திய இணையமைச்சர் எல்.முருகன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
News July 7, 2025
26/11 தாக்குதல்: பாக்., தொடர்பு உறுதியானது

26/11 தாக்குதலில் பாக்.,க்கு நேரடி தொடர்பு இருந்தது உறுதியாகியுள்ளது. ராணாவிடம் நடத்தப்பட்ட விசாரணையில், மும்பையில் தாக்குதலின் போது, தான் அங்கு இருந்ததையும், இந்தியாவில் நடந்த தாக்குதல்களில் பாக்.,க்கு நீண்டகாலமாக தொடர்பிருப்பதையும், குறிப்பாக, 26/11 தாக்குதலில் பாக். தொடர்பையும் அவர் உறுதிச் செய்துள்ளார். இந்த விசாரணைக்காக அமெரிக்கா அண்மையில் ராணாவை இந்தியாவிடம் ஒப்படைத்தது குறிப்பிடத்தக்கது.
News July 7, 2025
வார விடுமுறை… சுற்றுலாப் பயணிகளுக்கு குட் நியூஸ்

மலைகளின் ராணி என அழைக்கப்படும் ஊட்டிக்கு சுற்றுலா செல்பவர்களின் முதல் ஆசை மலை ரயிலில் பயணிக்க வேண்டும் என்பதே. மேட்டுப்பாளையம் – ஊட்டி இடையே ஜூலை 11 – ஆக. 17 வரை வெள்ளி, ஞாயிறுகளில் சிறப்பு மலை ரயில் இயக்கப்படும் என சேலம் ரயில்வே கோட்டம் அறிவித்துள்ளது. இதேபோல், ஊட்டி – மேட்டுப்பாளையம் இடையே ஜூலை 12 – ஆக. 18 வரை சனி, திங்களில் சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளது. டூர் போக ரெடியா..!