News August 25, 2025

விழுப்புரம்: லஞ்சம் கேட்டால் இனி இதை பண்ணுங்க

image

விழுப்புரம் மக்களே சாதி, வருவாய், குடியிருப்பு மற்றும் மதிப்பீடு சான்றிதழ் வாங்குவதற்கு, பட்டா மாற்றம், சிட்டா உள்ளிட்ட பல்வேறு வேலைகளுக்காக நாம் வாழ்க்கையாகல் கண்டிப்பாக ஒருமுறையாவது தாசில்தார் அலுவலகத்திற்கு சென்று இருப்போம். அங்கு இவற்றை முறையாக செய்யாமல் அதிகாரிகள் லஞ்சம் கேட்டால் லஞ்ச ஒழிப்புத் துறையில் (04146-259216) புகாரளிக்கலாம். இந்த நல்ல தகவலை அனைவருக்கும் SHARE செய்து உதவுங்கள்.

Similar News

News August 26, 2025

விழுப்புரம் இரவு ரோந்து பணி விவரங்கள்

image

விழுப்புரம் மாவட்டத்தில் (ஆகஸ்ட் 25) இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.

News August 25, 2025

விழுப்புரம்: துப்பாக்கி சுடுதல் போட்டி

image

விழுப்புரம், திருச்சி தேசிய நெடுஞ்சாலை, தனியார் கல்லூரி பின்புறத்தில் வருகின்ற ஆகஸ்ட்.30ம் தேதி, 1ஆம் ஆண்டு மாவட்ட அளவிலான துப்பாக்கி சுடுதல் போட்டி நடைபெற உள்ளது. இந்த நிகழ்வில் சிறப்பு விருந்தினராக மாவட்ட ஆட்சியர் ஷே.ஷேக் அப்துல் ரகுமான், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ப.சரவணன் ஆகியோர் கலந்து கொள்ள உள்ளனர். இந்த நிகழ்வை விழுப்புரம் மாவட்ட துப்பாக்கி பயிற்சி விளையாட்டு சங்கம் ஏற்பாடு செய்துள்ளது.

News August 25, 2025

விழுப்புரம் காவல்துறை சார்பில் வாகன ஓட்டிகளுக்கு அறிவுறுத்தல்

image

சாலை விபத்துகளால் ஏற்படும் உயிர் இழப்புகளைத் தடுக்கும் நோக்கில், விழுப்புரம் மாவட்ட காவல்துறை வாகன ஓட்டிகளுக்கு முக்கிய அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளது. அதன்படி, நான்கு சக்கர வாகனங்களை இயக்கும்போது, இருக்கை பட்டையை (சீட் பெல்ட்) கட்டாயம் அணிய வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது. இது விபத்துக்களின்போது ஏற்படும் பாதிப்புகளைக் குறைத்து, பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!