News April 9, 2024

வரலாற்றில் இன்று

image

➤1241 – மங்கோலியப் படையினர் போலந்து மற்றும் ஜெர்மானியப் படைகளைத் தாக்கி தோற்கடித்தனர்.
➤1413 – ஐந்தாம் என்றி இங்கிலாந்து மன்னனாக முடி சூடினார்.
➤1440 – கிறித்தோபர் டென்மார்க் மன்னராக முடிசூடினார்.
➤ 2003 – பாக்தாத் நகரை அமெரிக்கக் கூட்டுப் படையினர் கைப்பற்றினர்.
➤ 2013 – ஈரானில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் 32 பேர் உயிரிழந்தனர்.

Similar News

News March 16, 2026

ஐஸ்கிரீமில் Paracetamol Flavour-ஆ?

image

Paracetamol மாத்திரை தெரியும். ஆனா Paracetamol ஐஸ்கிரீம் கேள்விப்பட்டு இருக்கீங்களா? இதுதான் இன்னைக்கு வைரல் நியூஸ். நெதர்லாந்தில் Paracetamol ஐஸ்க்ரீம் தயாரிக்கப்பட்டதாக செய்தி ஒன்று வெளியானது. உடனே நெட்டிசன்கள், இதன் பயன் என்ன, டேஸ்ட் எப்படி என்று விசாரிக்க தொடங்கிவிட்டனர். ஆனால், உண்மையில் 2016-ம் ஆண்டு கார்னிவலில் காட்சிப்படுத்துவதற்காக பேக்கரி ஒன்று தயாரித்த ஐஸ்கிரீம் இது.

News March 16, 2026

ஜூஸுக்கு GAS CRISIS CHARGE.. வைரலாகும் பில்

image

லெமன் ஜூஸ் குடிச்சதுக்கு பில்லில் கேஸ் கட்டணம் வசூலித்த சம்பவம் இணையத்தில் கிண்டலுக்கு ஆளாகியுள்ளது. பெங்களூரு உணவகத்தின் பில் இணையத்தில் வைரலாக, ஜூஸுக்கு கேஸா என நெட்டிசன்கள் கேலி செய்து வருகின்றனர். கமர்ஷியல் சிலிண்டர் தட்டுப்பாடு காரணமாக உணவகங்கள் வாடிக்கையாளர்களின் பில்லில் கூடுதலாக கேஸ் கட்டணத்தை சேர்த்து வருகின்றனர். ஆனால், இந்த உணவகம் ஒருபடி மேலே சென்றுவிட்டது.

News March 16, 2026

தமிழக தேர்தல்: விஜய் திடீர் முடிவு

image

சென்னை பட்டினப்பாக்கம் இல்லத்தில் தவெக முக்கிய நிர்வாகிகளுடன் விஜய் திடீர் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார். தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், 2-ம் கட்ட வேட்பாளர் நேர்காணல் நடத்துவது தொடர்பாக அவர் விவாதித்ததாக கூறப்படுகிறது. மேலும், தமிழகம் முழுவதும் 25 நாள்கள் பரப்புரை மேற்கொள்வது குறித்தும் விஜய் ஆலோசித்துள்ளாராம். விரைவில் அவரது பரப்புரை திட்டம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

error: Content is protected !!