News August 25, 2025
இதுக்கு சரியா பதில் சொல்லுங்க பார்ப்போம்!

அடுத்தடுத்து நியூஸ் படிச்சி டயர்ட்டாகி இருக்கும் உங்களின் மூளையை வாங்க கொஞ்சம் சுறுசுறுப்பாக்குவோம். மேலே உள்ள படத்தில் இருக்கும் கேள்வியை கவனியுங்க. இவற்றில் Blue, yellow, green பலூன்கள் எவ்வளவு என சரியாக கமெண்ட் பண்ணுங்க. பார்க்க கஷ்டமாக இருந்தாலும், ரொம்ப ஈசி. கொஞ்சம் பொறுமையா யோசிச்சி பாருங்க. எத்தனை பேர் கரெக்ட்டா பதில் சொல்றீங்கனு பார்ப்போம்!
Similar News
News August 25, 2025
நாளை இந்த நேரத்தில் வீட்டை விட்டு வெளியே வராதீங்க!

ஒருபுறம் தமிழ்நாட்டில் ஒரு வாரத்திற்கு மழை நீடிக்கும் எனவும், மறுபுறம் பல மாவட்டங்களில் வெப்பநிலை 2- 3 செல்சியஸ் அதிகரிக்கும் என்றும் IMD தெரிவித்துள்ளது. நாளை முதல் 29-ம் தேதி வரை வெப்பநிலை அதிகரிக்கும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. மதுரை உள்ளிட்ட 4 இடங்களில் இன்றே வெயில் 100 டிகிரியை தாண்டி பதிவாகியுள்ளது. இதனால், நாளை முதல் காலை 11 மணி – பிற்பகல் 3 மணி வரை வெளியே செல்வதை தவிர்க்கவும்.
News August 25, 2025
குழந்தை School-க்கு போக பயப்படுதா? இத செய்யுங்க

பள்ளியில் சேர்த்து பல மாதங்கள் ஆகியும் School-க்கு செல்லமாட்டேன் என குழந்தை அடம்பிடித்தால், அவர்களை அடிக்காமல் அவர்களிடம் சில விஷயங்கள் குறித்து பெற்றோர்கள் மனம் திறந்து பேசவேண்டும். ▶பள்ளியில் ஒதுக்கப்படுகிறார்களா என்பது பற்றி பேசுங்கள் ▶பாலியல் தொல்லை போன்ற பிரச்னைகள் இருக்கிறதா என கேளுங்கள் ▶ஆசிரியர்கள் அடிக்கிறார்களா என விசாரியுங்கள். SHARE.
News August 25, 2025
நடிகை ஸ்ரீதேவியின் சொத்து.. பரபரப்பு தகவல்

மறைந்த நடிகை ஸ்ரீதேவிக்கு சொந்தமான சென்னை ECR-ல் உள்ள இடத்தை போலி வாரிசு சான்று மூலம் 3 பேர் அபகரிக்க முயல்வதாக கணவர் போனி கபூர் ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளார். இந்த வழக்கை விசாரித்த கோர்ட் தாம்பரம் தாசில்தார் 4 வாரங்களில் பதிலளிக்க உத்தரவிட்டுள்ளது. 1988-ல் நடிகை ஸ்ரீதேவி இந்த சொத்தை வாங்கியுள்ளார். பிரபல நடிகையின் வாரிசு என போலி சான்று தயாரிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.