News April 9, 2024
மோடிக்கு நிகரான தலைவர்கள் யாரும் இல்லை

மோடிக்கு இணையான வேட்பாளர் எந்த கூட்டணியிலும் இல்லை என டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். எம்ஜிஆர் வழங்கியுள்ள சின்னம் எங்களிடம் தான் உள்ளது என கூறிக்கொள்ளும் எடப்பாடி பழனிசாமி ஏன் மக்களவை தேர்தலில் போட்டியிடவில்லை எனக் கேள்வி எழுப்பிய அவர், அதிமுக அனைத்து தொகுதிகளிலும் தோல்வி அடையும் என்றார். மேலும், திமுக, அதிமுக கூட்டணியில் பிரதமர் வேட்பாளர்கள் என்று யாரும் இல்லை எனவும் அவர் விமர்சித்தார்.
Similar News
News March 14, 2026
ராசி பலன்கள் (14.03.2026)

ஒவ்வொரு நாளும் உங்களுக்கு உற்சாகம் தரும் நாளாக அமையட்டும். உங்களுக்கான தினசரி ராசி பலன்களை போட்டோ வடிவில் மேலே கொடுத்துள்ளோம். அவற்றை ஒவ்வொன்றாக SWIPE செய்து உங்களுக்கான பலனை அறிந்துகொள்ளுங்கள். உங்கள் நண்பர்களுக்கும் இதை ஷேர் பண்ணுங்க!
News March 14, 2026
Adobe நிறுவன CEO சாந்தனு நாராயண் விலகல்

உலகப் புகழ்பெற்ற மென்பொருள் நிறுவனமான Adobe-ன் CEO பொறுப்பில் இருந்து சாந்தனு நாராயண் விலகியுள்ளார். இந்திய வம்சாவளியை சேர்ந்த அவர், 18 ஆண்டுகளாக அந்த பொறுப்பில் திறம்பட செயலாற்றினார். பதவி விலகுவதாக அறிவித்த உடனே Adobe-ன் பங்குகள் 7% அளவுக்கு சரிவை சந்தித்துள்ளன. இவரது தலைமையின் கீழ் Photoshop, Premiere Pro, Illustrator, InDesign போன்றவை உலகத் தரமான படைப்புகளாக மாறின.
News March 14, 2026
பெட்ரோல், டீசல்.. தமிழகத்தில் வெளியான அறிவிப்பு

தட்டுப்பாடு ஏற்படும் என்ற அச்சத்தில் பொதுமக்கள் பெட்ரோல் பங்குகளில் தேவைக்கு அதிகமாக எரிபொருளை நிரப்புவதை பார்க்க முடிகிறது. இந்நிலையில், பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு என்ற வதந்தியை நம்ப வேண்டாம் என தமிழ்நாடு பெட்ரோல் டீலர்கள் கூட்டமைப்பு கேட்டுக்கொண்டுள்ளது. தமிழ்நாட்டில் எந்த தட்டுப்பாடும் இல்லை எனவும் இன்னும் 90 நாள்களுக்கு எந்த சிக்கலும் இருக்காது எனவும் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.


