News August 25, 2025

BREAKING: திண்டுக்கல்லில் ரூ.17 கோடி ஊழல்!

image

திண்டுக்கல் மாநகராட்சியில் நடைபெற்ற ரூ.17 கோடி ஊழல் தொடர்பாக 5 அதிகாரிகள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. 2015 முதல் 2018ஆம் ஆண்டு வரை திண்டுக்கல் மாநகராட்சியில் ரூ.17 கோடி ஊழல் நடந்ததாக தணிக்கையில் தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில், முன்னாள் ஆணையர் உட்பட 5 அதிகாரிகள், தனியார் நிறுவன உரிமையாளர் மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்குப்பதிவு செய்துள்ளது.

Similar News

News August 26, 2025

திண்டுக்கல் இன்றைய இரவு நேர ரோந்து காவலர்கள் விவரம்!

image

திண்டுக்கல் மாவட்ட காவல் துறை இன்று (ஆகஸ்ட் 25) இரவு 11 மணி முதல் நாளை மாலை 6 மணி வரை நிலக்கோட்டை, பழனி, ஒட்டன்சத்திரம், கொடைக்கானல் மற்றும் வேடசந்தூர் பகுதிகளில் தீவிர ரோந்து பணிகளை முன்னெடுக்கிறது. பொதுமக்கள் அவசர தேவைகளுக்கு காவல் துறையின் வெளியிட்ட தொலைபேசி எண்கள் மூலம் தொடர்பு கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

News August 25, 2025

காப்பி வித் கலெக்டர் கலந்துரையாடல் நிகழ்ச்சி

image

காபி வித் கலெக்டர் திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த இளம்தொழில் முனைவோர்களுடனான கலந்துரையாடல் நிகழ்ச்சி மாவட்ட ஆட்சித் தலைவர் சரவணன் தலைமையில் இன்று (ஆக.25) நடைபெற்றது. அருகில் உதவி ஆட்சியர் (பயிற்சி) வினோதினி, மாவட்ட தொழில் மைய பொது மேலாளர் கமலக்கண்ணன், தமிழ்நாடு புத்தாக்கம் மற்றும் புத்தொழில் இயக்க மதுரை வட்டார மைய ஒருங்கிணைப்பாளர் சக்திவேல், மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

News August 25, 2025

மூன்று சக்கர சைக்கிள் வழங்கிய ஆட்சியர்

image

திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் இன்று மாவட்ட ஆட்சித் தலைவர் சரவணன் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பாக மாற்றுத்திறனாளி பெண் ஒருவருக்கு ரூ.11,445 மதிப்பீட்டில் மூன்று சக்கர சைக்கிளை வழங்கினார் உடன் மாவட்ட வருவாய் அலுவலர் ஜெயபாரதி, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர்(பொது) கோட்டைக்குமார் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

error: Content is protected !!