News August 25, 2025

திருவாரூரில் விவசாயிகள் குறைதீர் கூட்டம்: ஆட்சியர் தகவல்

image

ஆகஸ்ட் மாதத்திற்கான திருவாரூர் மாவட்ட விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் வரும் ஆக.,28-ம் தேதி வியாழக்கிழமையன்று காலை திருவாரூர், மாவட்ட
ஆட்சியரக கூட்டரங்கில் நடைபெற உள்ளது. இக்கூட்டத்தில், வேளாண் துறை மற்றும் அனைத்து துறை அதிகாரிகள் கலந்து கொள்ள உள்ளனர். எனவே திருவாரூர் மாவட்ட விவசாயிகள், விவசாய சங்க பிரதிநிதிகள் கலந்து கொண்டு பயன்பெறுமாறு ஆட்சியர் மோகனசந்திரன் தெரிவித்துள்ளார்.

Similar News

News August 27, 2025

திருவாரூர்: LIC-யில் ரூ.88,000 சம்பளத்தில் வேலை!

image

காப்பீட்டு நிறுவனமான LIC நிறுவனத்தில் காலியாக உள்ள 841 Assistant Administrative Officers (AAO) பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு ஏதேனும் ஒரு டிகிரி முடித்திருந்தால் போதும். மாத சம்பளமாக ரூ.88,635 வரை வழங்கப்படும். விருப்பம் உள்ளவர்கள் <>இங்கே கிளிக் செய்து <<>>விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்க செப்.,08 கடைசி நாளாகும். அனைவருக்கும் இதனை ஷேர் செய்து தெரியப்படுத்துங்க.

News August 27, 2025

திருவாரூர்: மனித முகத்துடன் காட்சி தரும் விநாயகர்

image

பொதுவாக விநாயகர் என்றதும் யானை முகமும், பெரிய காதும் தான் ஞாபகம் வரும். ஆனால், திருவாரூர் மாவட்டம், கூத்தனூர் அருகே சிதிலபதியில் உள்ள முக்தீஸ்வரர் கோயிலில் விநாயகர் மனித முகத்துடன் ஆதி விநாயகர் என்ற பெயரில் தனிச் சன்னதியில் காட்சியளிக்கிறார். விநாயகர் சதுர்த்தி தினத்தன்று இங்குள்ள விநாயகரை தரிசித்தால் நினைத்த காரியம் நடக்கும் என்பது நம்பிக்கை. இத்தகவலை SHARE பண்ணுங்க..

News August 27, 2025

திருவாரூரில் உயர்வுக்கு படி திட்ட முகாம்

image

திருவாரூர் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், உயர்கல்வியில் சேராத 35 மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கான சிறப்பு குறைதீர் முகாம் மற்றும் +2 தேர்ச்சி மற்றும் தேர்ச்சி பெறாத உயர்கல்வியில் சேராத மாணவர்களுக்கான உயர்வுக்கு படி என்கிற வழிகாட்டல் முகாம் திருவாரூர் வேலுடையார்பள்ளியில் வரும் செப்.,1-ம் தேதி முதல் மற்றும் செப்.,11 வரை நடைபெற உள்ளது என்றார்.

error: Content is protected !!