News August 25, 2025

இனி ஆம்புலன்ஸை தாக்கினால் சிறை தண்டனை

image

திருச்சி EPS பிரச்சாரத்தில் ஆம்புலன்ஸ் ஓட்டுநரை அதிமுகவினர் தாக்கிய சம்பவம் சர்ச்சையானது. இந்நிலையில், ஆம்புலன்ஸ் வாகனம் & ஓட்டுநர் மீது தனி நபரோ, கூட்டமாகவோ தாக்குதல் நடத்தினால் 3-10 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்படும் என்று அரசு எச்சரித்துள்ளது. கைதாகுபவர்கள் மீது ஜாமினில் வெளிவர முடியாத பிரிவுகளின் கீழ் வழக்குப்பதியப்படும் எனவும் மக்கள் நல்வாழ்வுத்துறை தெரிவித்துள்ளது.

Similar News

News August 26, 2025

திமுகவுக்கு வந்த புது நெருக்கடி

image

TN-ல் 6 ஆண்டுகளாக தேர்தலில் போட்டியிடாத <<17514578>>6 கட்சிகளுக்கு<<>> ECI நோட்டீஸ் அனுப்பியுள்ளது. திமுக கூட்டணியில் உள்ள மனிதநேய மக்கள் கட்சிக்கு இந்த விவகாரம் பெரும் சிக்கலை கொடுத்துள்ளது. 2 MLA-க்கள் இருந்தும் மமக-வுக்கு நெருக்கடி ஏற்பட காரணம் 2021 தேர்தலில் திமுகவின் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டதுதான். இதனால், 2026 தேர்தலில் மமக, கொமதேக தனி சின்னத்தில் போட்டியிட திமுகவுக்கு நெருக்கடி கொடுக்கிறது.

News August 26, 2025

FLASH: பங்குச்சந்தைகள் நேற்று உயர்வு, இன்று கடும் சரிவு!

image

நேற்று ஏற்றம் கண்ட பங்குச்சந்தைகள் இன்று கடும் சரிவுடன் வர்த்தகத்தை நிறைவு செய்துள்ளன. சென்செக்ஸ் 849 புள்ளிகள் சரிந்து 80,786 புள்ளிகளிலும், நிஃப்டி 255 புள்ளிகள் சரிந்து 24,712 புள்ளிகளும் வர்த்தகமாகின. குறிப்பாக Reliance, Sun Pharma, Shriram Finance, Tata Steel, Bajaj Finance, Trent உள்ளிட்ட முக்கிய நிறுவனங்களின் பங்குகள் கடும் சரிவை கண்டதால் முதலீட்டாளர்கள் கலக்கம் அடைந்துள்ளனர்.

News August 26, 2025

BREAKING: பள்ளி மாணவர்கள் திடீர் மயக்கம்

image

திருவள்ளூர், கும்மிடிப்பூண்டி அருகே அரசு பள்ளியில் 10-ம் வகுப்பு படிக்கும் மாணவிகள் 4 பேருக்கு திடீரென மூச்சுத்திணறல் ஏற்பட்டு மயங்கியதால் ஹாஸ்பிடலில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். பள்ளியை சுற்றியுள்ள தொழிற்சாலையில் இருந்து நச்சு வாயு வெளியேறியதால் மூச்சுத்திணறல் ஏற்பட்டதாக முதற்கட்டத் தகவல் வெளியாகியுள்ளது.

error: Content is protected !!