News August 25, 2025

சிறையில் இருந்தே அரசை நடத்த வேண்டுமா? அமித்ஷா

image

PM, CM பதவி பறிப்பு மசோதாவுக்கு எதிர்க்கட்சியினர் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், சமீப காலமாக சிறை செல்லும் அரசியல்வாதிகள் தங்கள் பதவியை ராஜினாமா செய்யாமல் இருக்கும் போக்கு உருவாகியுள்ளதாக அமித்ஷா சாடியுள்ளார். சிறையில் இருந்தே யாராவது அரசை நடத்த வேண்டுமா? என கேள்வி எழுப்பிய அவர், தமிழகத்தில் சில அமைச்சர்கள் ராஜினாமா செய்யவில்லை என்றும் சுட்டிக்காட்டியுள்ளார்.

Similar News

News August 26, 2025

மோடி சிறைக்கு சென்றால்.. அமித்ஷா சொல்வது இதுதான்!

image

பதவி பறிப்பு மசோதா குறித்து பேசிய மத்திய அமைச்சர் அமித்ஷா, PM மோடி சிறைக்கு சென்றால் அவரும் கூட பதவியை இழப்பார் எனத் தெரிவித்துள்ளார். மோடி அவருக்கு எதிராகவே ஒரு அரசியல் சாசன திருத்தத்தை கொண்டு வந்து இருப்பதாக குறிப்பிட்ட அவர், முதல்வரோ, பிரதமரோ அல்லது எந்தவொரு தலைவரோ சிறையில் இருந்தவாறு நாட்டை வழிநடத்த முடியுமா என கேள்வி எழுப்பியுள்ளார்.

News August 26, 2025

ராசி பலன்கள் (26.08.2025)

image

➤ மேஷம் – ஆதாயம் ➤ ரிஷபம் – ஆதரவு ➤ மிதுனம் – தோல்வி ➤ கடகம் – போட்டி ➤ சிம்மம் – லாபம் ➤ கன்னி – பெருமை ➤ துலாம் – பயம் ➤ விருச்சிகம் – நற்சொல் ➤ தனுசு – மகிழ்ச்சி ➤ மகரம் – கீர்த்தி ➤ கும்பம் – சோதனை ➤ மீனம் – வாழ்வு.

News August 25, 2025

அதிமுகவில் இருந்து எட்டப்பனான 8 பேர்: EPS சாடல்

image

அதிமுகவில் இருந்து 8 பேர் எட்டப்பனாக மாறி திமுகவுக்கு சென்று அமைச்சராகியுள்ளதாக EPS விமர்சித்துள்ளார். திருச்சி மணப்பாறை பரப்புரையில் பேசிய அவர், மீண்டும் ஆட்சிக்கு வர முடியாது என்பதால் திமுக MLA-க்கள், அமைச்சர்கள் கொள்ளையடிப்பதாக கூறினார். கடந்த ஆண்டுகளை விட அரசு பள்ளிகளில் 1.40 லட்சம் மாணவர்களின் எண்ணிக்கை குறைந்துள்ளது. ஆனால், அரசுக்கு அதுபற்றி எந்தக் கவலையும் இல்லை என விமர்சனம் செய்தார்.

error: Content is protected !!