News August 25, 2025
தி.மலை மக்களே இந்த நம்பர் உங்க கிட்ட இருக்கா?

அரசு மருத்துவ மனைகளை நம்பி தினமும் ஆயிரக்கணக்கான மக்கள் சிகிச்சைக்கு வந்து செல்லும் நிலையில், சில நேரங்களில் அங்கு சிகிச்சை சரி இல்லை என்ற புகாரும் வருகிறது. அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை சரி இல்லை என்றாலோ, பணியாளர்கள் சரியாக நடந்துகொள்ளவில்லை என்றாலோ பொதுமக்கள் TOLL FREE 104 எண்ணில் புகார் செய்யலாம். தெரிந்தவர்களுக்கு ஷேர் பண்ணுங்க. <<17511488>>தொடர்ச்சி<<>>
Similar News
News August 26, 2025
அண்ணாமலையார் கோவிலில் திரைப்பட நடிகை தரிசனம்

திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோவிலில் நேற்று (ஆக.25) தமிழ் திரைப்பட நடிகையான சஞ்சிதா ஷெட்டி சுவாமி தரிசனம் செய்தார். இவர் சமீபத்தில் வெளிவந்த சூது கவ்வும் படத்தில் நடித்துள்ளார். இவர் தரிசனம் முடித்துவிட்டு வந்த பின் இவருடன் பக்தர்கள் புகைப்படம் எடுத்துக்கொண்டனர். மேலும் பாடகி சிறுமி தியா தனது இனிமை குரலால் நடிகைக்கு முருகன் பாடலை பாடி ஆச்சர்ய படுத்தினார்.
News August 26, 2025
தி.மலை மக்களுக்கு காவல்துறை எச்சரிக்கை

மோசடி என்பது ஒரு வகையான சைபர் குற்றமாகும், இதில் APK File & Link-காக உங்களுடைய தொலைபேசிக்கு WhatsApp, SMS-ல் அரசு திட்டங்கள் பற்றியோ, வங்கி நிறுவனங்கள், கம்பனிகள் தகவல் அனுப்புவதை போன்ற மோசடியான தகவல்கள் வந்தால் அதனை யாரும் பதிவிறக்கம் செய்ய வேண்டாம். மேலும் இதுபோன்ற சைபர் மோசடிகள் நடைபெற்றால் இலவச தொடர்பு எண் 1930 மற்றும் www.cybercrime.gov.in என்ற இணையதளத்தில் புகார் அளிக்கலாம்.
News August 25, 2025
உரிமையற்ற துப்பாக்கிகளை ஒப்படைக்க அறிவிப்பு

திருவண்ணாமலை மாவட்டத்தில் உரிமம் இல்லாமல் வைத்துள்ள நாட்டு துப்பாக்கிகளை வருகிற செப்டம்பர் 10ஆம் தேதிக்குள் ஒப்படைக்குமாறு மாவட்ட வன அலுவலர் அசோக்குமார் அறிவித்துள்ளார். உரிமை இல்லாத துப்பாக்கிகளை குறிப்பிடப்பட்ட தேதிக்குள் வனத்துறை அலுவலகங்களில் ஒப்படைக்கும் நபர்களுக்கு எந்தவித சட்ட நடவடிக்கையும் எடுக்கப்படாது. காலக்கெடு முடிந்த பின் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்துள்ளார்.