News April 9, 2024
இன்றைய தலைப்புச் செய்திகள்

➤ தேர்தலுக்காக 10,214 சிறப்புப் பேருந்துகள் அறிவிப்பு
➤ கமலிடம் மனநல சோதனை நடத்த வேண்டும் – அண்ணாமலை
➤ மோடிக்கு எதிராக தேர்தல் ஆணையத்தில் புகார்
➤ ஐ.பெரியசாமி மீதான வழக்கு விசாரணைக்கு தடை
➤ விவாகரத்து கோரி நடிகர் தனுஷ் – ஐஸ்வர்யா மனு
➤ தோனியை வீழ்த்துவது கடினம் – கம்பீர்
Similar News
News January 19, 2026
கன்னித்தன்மையை இழக்க விரும்பாத ஜப்பானியர்கள்

கடந்த 10 ஆண்டுகளாக ஜப்பான் இளைஞர்களுக்கு பாலுறவு ஈடுபாடு, பாலுறவு சார்ந்த நெருக்கம் மீதான ஆர்வம் கணிசமாக குறைந்துள்ளதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. 25 வயதைத் தொட்ட இளைஞர்களில் 50%-க்கும் மேலானோர் பாலுறவில் ஈடுபடாத Virgin-களாக உள்ளார்களாம். இதற்கு சமூக அழுத்தம், வாழ்க்கைமுறை மாற்றம், பணிச்சூழல், சுயசார்பு சிந்தனை போன்றவை காரணங்களாக இருக்கலாம் என வல்லுநர்கள் கூறுகின்றனர்.
News January 19, 2026
வாக்குச்சீட்டு முறையில் தேர்தல்!

கர்நாடக உள்ளாட்சித் தேர்தலில் வாக்குச்சீட்டு முறையே பின்பற்றப்படும் என அம்மாநில EC அறிவித்துள்ளது. வாக்குச்சீட்டு முறையில் தேர்தலை நடத்துவது தவறில்லை என்றும், EVM-ஐ மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்ற கட்டாயம் கிடையாது எனவும் தேர்தல் அதிகாரி சங்க்ரேஷி கூறியுள்ளார். மேலும், தேர்தலுக்கு EVM பயன்படுத்தலாம் என பாஜக கோரிக்கை வைத்ததாகவும் அவர் குறிப்பிட்டார். மே 25-க்கு பிறகு தேர்தல் நடைபெறவுள்ளது.
News January 19, 2026
இதுகூட ஸ்டாலினுக்கு தெரியாதா? அண்ணாமலை

எந்த முகத்தை வைத்துக்கொண்டு நாளொரு சதவீதம் வாக்குறுதிகளை நிறைவேற்றி விட்டோம் என்று பொய் சொல்லிக் கொண்டிருக்கிறீர்கள் என CM-க்கு அண்ணாமலை கேள்வி எழுப்பியுள்ளார். தங்களுக்கு திமுக அளித்த தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றாததால் நாளை முதல் சத்துணவு ஊழியர்கள் வேலைநிறுத்தம் அறிவித்துள்ளனர் என்றும், இதனால் பாதிக்கப்படுவது பள்ளி மாணவர்கள் என்பது கூட, ஸ்டாலினுக்கு தெரியாதா எனவும் அவர் விமர்சித்துள்ளார்.


