News April 9, 2024
மத்திய அரசின் தலையீட்டால் மணிப்பூரில் முன்னேற்றம்

மத்திய மற்றும் மாநில அரசுகளின் தலையீட்டால் மணிப்பூர் சூழலில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். கடந்த மே மாதம் மணிப்பூரில் இரு சமூகத்தினர் இடையே வெடித்த மோதலில் 200க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். இது குறித்து தனியார் நாளிதழுக்கு அளித்த பேட்டியில் அவர், “மணிப்பூரில் உள்ள முகாம்களில் வசிக்கும் மக்களுக்கான நிவாரணம் மற்றும் மறுவாழ்வு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன” என்றார்.
Similar News
News January 17, 2026
திமுக அரசு கொடுத்த பால்கோவா: செல்லூர் ராஜு

அரசு ஊழியர்களுக்கு ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு பால்கோவா கொடுத்து உள்ளது என செல்லூர் ராஜு விமர்சித்துள்ளார். ஸ்ரீவில்லிபுத்தூரில் பேட்டியளித்த அவர், வரும் தேர்தலில் வாக்குகள் பெறுவதற்காக பொங்கலுக்கு திமுக அரசு பணம் கொடுத்துள்ளது என்றார். மேலும், போதை கலாசாரம் ஒழிய, சட்டம் ஒழுங்கு காக்கப்பட, விலைவாசி குறைய திமுக ஆட்சி விலக வேண்டும் என்பது கனவாக உள்ளது எனவும் தெரிவித்துள்ளார்.
News January 17, 2026
BREAKING: தங்கம் விலை மீண்டும் உயர்ந்தது

நேற்று சரிவைக் கண்ட தங்கம் விலை இன்று(ஜன.17) மீண்டும் உயர்வைக் கண்டுள்ளது. 22 கேரட் தங்கம் கிராமுக்கு ₹50 உயர்ந்து ₹13,280-க்கும், சவரன் ₹400 அதிகரித்து ₹1,06,240-க்கும் விற்பனையாகிறது. <<18877216>>சர்வதேச சந்தையில்<<>> தங்கம் விலை 1 அவுன்ஸ்(28) 23 டாலர்கள் குறைந்திருந்தாலும், இந்திய சந்தையில் தங்கம் விலை இன்று உயர்வைக் கண்டுள்ளது.
News January 17, 2026
இனி வேலைக்கு ஆட்கள் எடுப்பது ஈஸி

சிறு, குறு நிறுவனங்கள், தொழில்முனைவோர், வணிகர்களுக்கு ஒரு மகிழ்ச்சியான செய்தி! WAY2NEWS செயலியில் இப்போது ‘உள்ளூர் வேலைவாய்ப்புகள்’ அம்சம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. உங்கள் நிறுவனத்திற்குத் தேவையான ஆட்களை நேரடியாகத் தேர்வு செய்ய இது ஒரு சிறந்த வாய்ப்பு. உங்கள் உள்ளூர் வேலை விளம்பரங்களைப் பதிவிட இப்போதே கீழே உள்ள <


