News April 8, 2024
அதிமுக, திமுகவுக்கு வாக்களித்தது போதும்

அதிமுகவுக்கும், திமுகவுக்கும் மாறி மாறி வாக்களித்தது போதுமென பாமக தலைவர் அன்புமணி தெரிவித்துள்ளார். தர்மபுரியில் பாமக வேட்பாளர் செளமியா அன்புமணியை ஆதரித்து வாக்கு சேகரித்த அவர், “எங்கே பெண்களுக்கு பிரச்னை என்றாலும், என்னை விட அவர் தான் முதலில் சென்று இருப்பார். 57 ஆண்டுகளுக்கு மேலாக திமுக, அதிமுகவுக்கு வாக்களித்தும் நமது வாழ்க்கை அப்படியே தான் இருக்கிறது. எந்த விடியலும் இல்லை” என்றார்.
Similar News
News March 26, 2026
விழுப்புரம்: இபிஎஸ் அதிரடி நடவடிக்கை!

அதிமுக சட்ட திட்டங்களுக்கு மாறுபட்டு ஒழுங்குமுறை குறையும் வகையில் நடந்து கொண்டதாலும், கட்சியின் கண்ணியத்திற்கு மாசு ஏற்படும் வகையில் கட்டுப்பாட்டை மீறி கட்சிக்கு களங்கம் உண்டாக்கும் விதத்தில் செயல்பட்டதால் விழுப்புரம் தெற்கு நகர கழக செயலாளர் ஆர்.பசுபதியை கட்சியின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் விடுவிக்கப்படுவதாக அதிமுக பொதுச் செயலாளர் இபிஎஸ் அறிவித்துள்ளார்.
News March 26, 2026
நேற்று அதிமுக; இன்று திமுக!

கூட்டணி கட்சிகள் போட்டியிடும் தொகுதிகளின் பட்டியலை திமுக தலைமை இன்று வெளியிடுகிறது. நேற்று முக்குலத்தோர் புலிப்படை, மஜக, எஸ்டிபிஐ உள்ளிட்ட கட்சிகளுக்கு தொகுதிப் பங்கீடு நிறைவடைந்தது. தேமுதிகவுக்கான தொகுதிகளில் மட்டும் இழுபறி நீடித்து வரும் நிலையில் காலை 10 மணிக்குள் அவை களையப்பட்டு பின்னர், இறுதிப் பட்டியலை ஸ்டாலின் வெளியிட்ட உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. <<-se>>#TNElection2026<<>>
News March 26, 2026
கேன்சரை தடுக்கும் அற்புத பழம்.. தினமும் 1 போதும்!

எளிதில் கிடைப்பதாலேயே கொய்யாவின் அருமையை நாம் மதிப்பதில்லை. ஆனால், கேன்சரை தடுக்கும் அற்புத சக்தி இந்த பழத்தில் இருக்கிறது என டாக்டர்கள் கூறுகின்றனர். ➤ஆய்வுகளின் படி, கொய்யாவில் உள்ள லைகோபீன் என்ற கரோட்டினாய்டு, கேன்சர் செல்கள் உருவாவதையும், அவற்றின் வளர்ச்சியையும் தடுக்கிறது ➤இதில் உள்ள வைட்டமின் சி நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது ➤நார்ச்சத்து வயிறு பிரச்னைகளை சரி செய்கிறது. SHARE.


