News August 25, 2025
BREAKING: கடலூரில் மீண்டும் பள்ளி வேன் விபத்து

கடலூர் மாவட்டம், விருத்தாச்சலம் அடுத்த பூவனூர் கிராமத்தில், பள்ளி மாணவர்களை ஏற்றிச் சென்ற வேன் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து ரயில் தண்டவாளத்தில் கவிழ்ந்து விபத்து ஏற்பட்டது. ரயில் எதுவும் வராததால் நல்வாய்ப்பாகப் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. பூவனூர் கிராம மக்களின் உதவியுடன் வேனில் இருந்து பள்ளி மாணவர்களை மீட்டு, தண்டவாளத்தில் இருந்து வேன் அகற்றப்பட்டது.
Similar News
News August 25, 2025
கடலூர்: LIC-ல் ரூ.88,635 சம்பளத்தில் வேலை!

LIC காப்பீட்டு நிறுவனத்தில் காலியாக உள்ள 841 Assistant Administrative Officers (AAO) பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு ஏதேனும் ஒரு டிகிரி முடித்திருந்தால் போதும். மாத சம்பளமாக ரூ.88,635 வரை வழங்கப்படும். விருப்பம் உள்ளவர்கள் 08.09.2025 தேதிக்குள் இங்கே <
News August 25, 2025
கடலூர்: கல்விக்கடன் வழங்கும் முகாம்

நான் முதல்வன் – “உயர்வுக்குப் படி” வழிகாட்டி நிகழ்ச்சி முகாம் மற்றும் கல்விக்கடன் வழங்கும் முகாம் வரும் ஆக.26-ம் தேதி சிதம்பரம் வாண்டையார் மண்டபத்தில் நடைபெற உள்ளது. இதில் கல்விக் கடன் கோரும் மாணவர்கள் http://www.vidyalakshmi.co.in/students என்ற இணையவழி மூலமாக விண்ணப்பித்தும் உரிய ஆவணங்களுடன் முகாமில் கலந்துகொண்டு பயன்பெறலாம் என மாவட்ட ஆட்சியர் சிபி ஆதித்யா செந்தில்குமார் தெரிவித்தார். SHARE IT…
News August 25, 2025
கடலூர்: இரவு ரோந்து காவலர்கள் விவரம்

கடலூர் மாவட்ட காவல்துறை சார்பில் மாவட்டத்தில் தினந்தோறும் இரவு ரோந்து பணி நடைபெற்று வருகிறது. அந்த வகையில் இன்று (24/08/2025) இரவு கடலூர் மாவட்டத்தில் கடலூர் உட்பட, சிதம்பரம், விருத்தாசலம், நெய்வேலி, சேத்தியாத்தோப்பு, பண்ருட்டி, திட்டக்குடி ஆகிய இடங்களில் ரோந்து செல்லும் காவல் அதிகாரிகள் தொலைபேசி எண்கள் கடலூர் மாவட்ட காவல் துறை சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.