News April 8, 2024
IPL: சென்னை அபார வெற்றி

KKR அணிக்கு எதிரான ஐபிஎல் போட்டியில் CSK அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றிபெற்றுள்ளது. 138 ரன்கள் இலக்கை துரத்தி ஆடிய CSK அணியில் ருதுராஜ் 67*, ரச்சின் 15, மிச்செல் 25, தூபே 28, தோனி 1* ரன்கள் அடித்தனர். இதையடுத்து CSK 17.4 ஓவரில் இலக்கை அடைந்து வெற்றிபெற்றது. அரோரா 2, நரைன் 1 விக்கெட் வீழ்த்தினர். இந்த வெற்றி மூலம் நடப்பு தொடரில் CSK 3 ஆவது வெற்றியை பதிவு செய்துள்ளது.
Similar News
News November 12, 2025
மீண்டும் இபிஎஸ் உடன் இணைகிறார்களா?

தவெக கூட்டணிக்கு வராத நிலையில், OPS, TTV, செங்கோட்டையனை கூட்டணியில் சேர்க்க EPS-க்கு பாஜக அழுத்தம் கொடுத்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. இதற்கு முதலில் மறுத்த EPS, பின்னர் கள சூழலை புரிந்து, கூட்டணியில் சேர்க்க, ஒரு கண்டிஷனை போட்டுள்ளாராம். அம்மூவரும் தனி சின்னத்தில் போட்டியிட்டுக் கொள்ளலாம் என நிபந்தனை விதித்துள்ளாராம். இதற்கு பாஜக உள்பட சம்பந்தப்பட்டவர்கள் ஓகே சொல்லுவார்களா?
News November 12, 2025
பள்ளிகளுக்கு 2 நாள்கள் கூடுதல் விடுமுறையா?

2026-ம் ஆண்டுக்கான பொது விடுமுறை பட்டியலை அரசு நேற்று வெளியிட்டது. இதில், ஜன.15 பொங்கல், ஜன.16 திருவள்ளுவர் தினம், ஜன.17 உழவர் திருநாள் ஆகிய 3 நாள்கள் மட்டுமே விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், மாணவர்கள், பொதுமக்கள் பொங்கலுக்கு சொந்த ஊர் செல்ல ஏதுவாக ஜன.13 & போகி பண்டிகையான ஜன.14-ம் தேதியும் கூடுதல் விடுமுறை அளிக்க கோரிக்கை எழுந்துள்ளது. இதுகுறித்து அரசு பரிசீலனை செய்யும் என தெரிகிறது.
News November 12, 2025
ஜடேஜாவை நீக்குவது தோனியின் முடிவா?

CSK-வில் ஜடேஜாவை நீக்கி, சஞ்சு சாம்சனை கொண்டுவருவது தோனியின் முடிவாக இருக்கலாம் என Ex. இந்தியன் கிரிக்கெட்டர் முகமது கைஃப் கூறியுள்ளார். தோனி விளையாடும் கடைசி ஐபிஎல் சீசன் இதுவாக இருக்கலாம் என கூறிய அவர், சஞ்சு சாம்சனை உள்ளே கொண்டு வரும் தோனி அவரை அடுத்த கேப்டனாக்க பயிற்சி கொடுக்கலாம் எனவும் கூறினார். மேலும், சென்ற முறை ஜடேஜாவால் தலைமை பொறுப்பை சரியாக கையாள முடியவில்லை எனவும் அவர் தெரிவித்தார்.


