News August 25, 2025

தஞ்சை: ரேஷன் கடையில் பிரச்சனையா? இத பண்ணுங்க

image

தஞ்சை மாவட்ட மக்களே உங்கள் பகுதியில் உள்ள ரேஷன் கடைகளில் பொருட்கள் சரியாக வழங்கப்படாமலும், தரமில்லாத பொருட்களை வழங்கினால், பணியாளர்கள் சரியான நேரத்திற்கு வராமல், பொதுமக்களிடம் முறையாக நடந்துகொள்ளாமல் இருப்பது போன்ற பிரச்சனைகள் நடந்தால் இனி கவலை வேண்டாம். உடனே 1967 (அ) 1800-425-5901 என்ற எண்ணை அழைத்து புகார் அளிக்கலாம். இத்தகவலை அனைவருக்கும் ஷேர் செய்து தெரியப்படுத்துங்கள்

Similar News

News August 25, 2025

தஞ்சை: ஆயுதத் தொழிற்சாலையில் வேலை! சூப்பர் வாய்ப்பு!

image

தஞ்சை மக்களே… திருச்சியில் உள்ள ஆயுதத் தொழிற்சாலையில் காலியாக உள்ள 73 Tradesman பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதற்கு ஐ.டி.ஐ அல்லது டிப்ளமோ படித்த, 18 வயது பூர்த்தி அடைந்து 35 வயதுக்கு மேற்படாதவர்கள் <>இங்கே <<>>கிளிக் செய்து விண்ணப்பிக்கலாம். இந்த பணிக்கு, ரூ.19,900 சம்பளமாக வழங்கப்படும். இதற்கு விண்ணப்பிக்க செப்.21ம் தேதி கடைசி நாளாகும். இத்தகவலை அனைவருக்கும் SHARE பண்ணுங்க.

News August 25, 2025

மாணவனுக்கு உதவித்தொகை வழங்கிய ஆட்சியர்

image

தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று மக்கள் குறைதீர் கூட்டம் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் ப்ரியங்கா பங்கஜம், முதலமைச்சர் பொது நிவாரண நிதியிலிருந்து கல்வி உதவி தொகையாக ரூ.50,000 காசோலையை, பேராவூரணி வட்டம் முடப்புளிக்காடு பகுதியை சேர்ந்த ஹரி என்பவருக்கு தொழிற்கல்வி படிப்பதற்காக வழங்கினார். இந்த நிகழ்வில் மாவட்ட வருவாய் அலுவலர் தியாகராஜன் கலந்து கொண்டனர்.

News August 25, 2025

மதுபான கடையில் தகராறில் ஈடுபட்டவருக்கு குண்டர் சட்டம்

image

பட்டுக்கோட்டையில் கடந்த 30 ஆம் தேதி மதுபான கடையில் தகராறு செய்த வீரமணி என்ற இளைஞரை காவல்துறையினர் கைது செய்தனர். இந்நிலையில் அவர் மீது பல்வேறு வழக்குகள் உள்ளதால் அவர் மீது குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க மாவட்ட ஆட்சியருக்கு பரிந்துரைக்கப்பட்டது. அதன் அடிப்படையில் அவரை குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்ய தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் பிரியங்கா பங்கஜம் உத்தரவு.

error: Content is protected !!