News August 25, 2025
திண்டுக்கல்லில் பிஸ்னஸ் தொடங்க மானியம்!

திண்டுக்கல் மக்களே ஐடிஐ, டிப்ளமோ, டிகிரி படித்தவர்களுக்கு ரூ.75 லட்சம் மானியத்துடன் கூடிய ரூ.5 கோடி வரையிலான கடனுதவி NEEDS திட்டத்தின் மூலம் தமிழக அரசால் வழங்கப்படுகிறது. புதிதாக தொழில் தொடங்க நினைப்போர் இத்திட்டத்தில் பயனடையலாம். இந்தக் கடனை திரும்பி செலுத்த 9 ஆண்டு கால அவகாசம், மானியத்துடன் 3% வட்டிக்கு வழங்கப்படுகிறது. இதற்கு ஆன்லைனில் விண்ணப்பிக்க <
Similar News
News August 25, 2025
காப்பி வித் கலெக்டர் கலந்துரையாடல் நிகழ்ச்சி

காபி வித் கலெக்டர் திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த இளம்தொழில் முனைவோர்களுடனான கலந்துரையாடல் நிகழ்ச்சி மாவட்ட ஆட்சித் தலைவர் சரவணன் தலைமையில் இன்று (ஆக.25) நடைபெற்றது. அருகில் உதவி ஆட்சியர் (பயிற்சி) வினோதினி, மாவட்ட தொழில் மைய பொது மேலாளர் கமலக்கண்ணன், தமிழ்நாடு புத்தாக்கம் மற்றும் புத்தொழில் இயக்க மதுரை வட்டார மைய ஒருங்கிணைப்பாளர் சக்திவேல், மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
News August 25, 2025
மூன்று சக்கர சைக்கிள் வழங்கிய ஆட்சியர்

திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் இன்று மாவட்ட ஆட்சித் தலைவர் சரவணன் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பாக மாற்றுத்திறனாளி பெண் ஒருவருக்கு ரூ.11,445 மதிப்பீட்டில் மூன்று சக்கர சைக்கிளை வழங்கினார் உடன் மாவட்ட வருவாய் அலுவலர் ஜெயபாரதி, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர்(பொது) கோட்டைக்குமார் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
News August 25, 2025
திண்டுக்கல்: தீர்வு இல்லையா? CM Cell-ல் புகாரளியுங்கள்

கோவை மக்களே அரசின் சேவை சரிவர கிடைக்கவில்லையா? சம்பந்தப்பட்ட அதிகாரியிடம் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லையா? நேரடியாக முதலமைச்சரின் தனிப்பிரிவில் புகார் அளியுங்கள். <