News August 25, 2025

ராணிப்பேட்டை: ரூ.48,000 சம்பளத்தில் வங்கி வேலை

image

பொதுத்துறை வங்கியான பஞ்சாப் & சிந்து வங்கியில் காலியாக உள்ள உள்ளுர் வங்கி அதிகாரிகள் பணியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு டிகிரி முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். சம்பளமாக ரூ.48,000 முதல் ரூ.85,000 வரை வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. விண்ணப்பிக்க <>இங்கு கிளிச் <<>>செய்யவும். செப்.7-ம் தேதி கடைசி ஆகும். நல்ல சம்பளத்தில் வேலை தேடும் நபர்களுக்கு SHARE பண்ணுங்க.

Similar News

News November 11, 2025

ராணிப்பேட்டை: சாலை விபத்தில் விஏஓ பலி!

image

ராணிப்பேட்டை: சக்கரமல்லூர் கிராம நிர்வாக அலுவலராக முத்துக்குமார்(42) என்பவர் பணியாற்றி வந்தார். இவர் கடந்த இரு நாட்களுக்கு முன்பு பைக்கில் செல்லும் போது ஸ்பீட் பிரேக்கரில் தவறி கீழே விழுந்து படுகாயமடைந்தார். வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தவர் இன்று(நவ.11)அதிகாலை உயிரிழந்தார். இந்த சம்பவம் வருவாய்த்துறையினர் இடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

News November 11, 2025

ராணிப்பேட்டை: வேலூர் இப்ராஹிமிற்கு கொலை மிரட்டல்!

image

ராணிப்பேட்டை சட்டமன்ற தொகுதி பாஜக பொறுப்பாளரும் தேசிய செயலாளருமான வேலூர் இப்ராஹிமுக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டது. இது தொடர்பாக சிப்காட் போலீஸ் ஸ்டேஷனில் நேற்று(நவ.10) நள்ளிரவில் வேலூர் இப்ராஹிம் புகார் கொடுத்தார் .தொகுதியை விட்டு வெளியேறா விட்டால் கொலை செய்து விடுவோம் என்று போனில் மிரட்டல் விடுத்ததாக தெரிவித்தார். இந்நிகழ்வில், அவருடன் அதிமுக நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

News November 11, 2025

ராணிப்பேட்டை: இரவு ரோந்து காவலர்கள் விவரம்

image

ராணிப்பேட்டை மாவட்டத்தில் நேற்று (நவ-10) இரவு 10 மணி முதல் இன்று (நவ.11) காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100-ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!