News August 25, 2025
RECIPE: உடல் எடையை ஈசியாக குறைக்கும் வரகரிசி இட்லி!

◆செரிமானத்தை மேம்படுத்தவும், உடல் எடையை குறைக்கவும் வரகரிசி பெருமளவில் உதவுகிறது.
➥வரகரிசியையும், உளுந்தையும் தனித்தனியாக 4 மணி நேரம் ஊறவைத்து அரைத்து பிறகு உப்பு சேர்த்து கொள்ளவும்
➥கண்டிப்பாக மாவை குறைந்தது 6 மணி நேரமாவது புளிக்க வைக்க வேண்டும்
➥புளித்த மாவில் இட்லி ஊற்றி சாப்பிடலாம். ரத்த சர்க்கரை அளவை கட்டுப்படுத்த உதவுவதால், இது நீரிழிவு நோயாளிகளுக்கு நல்லது.
Similar News
News August 25, 2025
மீண்டும் ஒடிசா அரசியலில் VK பாண்டியன்..!

ஓராண்டு இடைவெளிக்கு பிறகு மீண்டும் நவீன் பட்நாயக்குடன் VK பாண்டியன் இணைந்திருப்பது ஒடிசா அரசியலில் புயலை கிளப்பியுள்ளது. மும்பை ஹாஸ்பிடலில், நவீன் பட்நாயக்கை VK பாண்டியன் உடன் இருந்து கவனித்துக் கொண்டுள்ளார். தற்போது, அவர் புவனேஸ்வர் ஹாஸ்பிடலில் சிகிச்சை பெற்று வரும் நிலையில், VK பாண்டியன்தான் கவனித்து வருகிறார். இது பிஜு ஜனதாதளம்(BJD) மூத்த தலைவர்கள் சிலரை அதிருப்தியில் ஆழ்த்தியுள்ளதாம்.
News August 25, 2025
Beauty Tips: Lip Balm வேணாம்.. உதடு பளபளக்க Tips

முகம், சிகை, உடைக்கு தரும் முக்கியத்துவத்தை நாம் உதடுகளுக்கு தருவதேயில்லை. உதடுகளை பராமரிக்க Lip balm மட்டும் போதாது. அதற்கு பல எளிய வழிகள் இருக்கிறது. ▶தேவையான அளவு தண்ணீர் குடிக்க வேண்டும் ▶உதட்டை நாவால் தடவ வேண்டாம் ▶நீண்ட நேரம் லிப்ஸ்டிக் போட்டப்படியே இருக்காதீர்கள் ▶பற்களின் சுகாதாரமும் முக்கியம் ▶புகைப்பழக்கத்தை விடுங்கள் ▶வைட்டமின் சி நிறைந்த உணவுகளை உட்கொள்ளுங்கள். SHARE IT.
News August 25, 2025
அரசியல் கட்சிகளுக்கு சுப்ரீம் கோர்ட் நற்செய்தி

பொது இடங்களில் அனுமதியின்றி வைக்கப்பட்டுள்ள கட்சி கொடிக்கம்பங்களை அகற்ற MHC மதுரைக் கிளை பிறப்பித்த உத்தரவுக்கு SC இடைக்காலத் தடை விதித்துள்ளது. MHC உத்தரவை எதிர்த்து மார்க்சிஸ்ட் கட்சி SC-ல் மேல்முறையீடு செய்தது. இந்த மனு, நீதிபதி விக்ரம்நாத் தலைமையிலான அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தபோது, ஐகோர்ட் உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்ததோடு 4 வாரத்திற்குள் TN அரசு பதில் அளிக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.