News August 25, 2025
தர்மபுரி : ஆன்லைன் மோசடி, மக்களே உஷார்!

அறிமுகமில்லாத நபர்களிடமிருந்து வரும் வீடியோ அழைப்புகள், சமூக வலைத்தளங்களில் வரும் ஆன்லைன் வர்த்தகம், கடன், கிரெடிட் கார்டு, ஏடிஎம் கார்டு புதுப்பித்தல் போன்றவற்றை நம்பி ஏமாற வேண்டாம் என சைபர் கிரைம் போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர். பணம் இழந்தால் 24 மணி நேரத்திற்குள் 1930 என்ற எண்ணிற்கு அழைத்து அல்லது இந்த <
Similar News
News August 25, 2025
தருமபுரி மக்களே.. லஞ்சம் கேட்டால் இத பண்ணுங்க.!

தருமபுரி மக்களே.. சாதி, வருவாய், குடியிருப்பு மற்றும் மதிப்பீடு சான்றிதழ் வாங்குவதற்கு, பட்டா மாற்றம், சிட்டா உள்ளிட்ட பல்வேறு வேலைகளுக்காக நாம் கண்டிப்பாக ஒரு முறையாவது தாசில்தார் அலுவலகத்திற்கு சென்றிருப்போம். அங்கு இவற்றை முறையாக செய்யாமல் அதிகாரிகள் லஞ்சம் கேட்டால் லஞ்ச ஒழிப்புத் துறையில் (044-27667070) என்ற எண்ணில் புகாரளிக்கலாம். இந்த நல்ல தகவலை அனைவருக்கும் SHARE செய்து உதவுங்கள்.
News August 25, 2025
குறைதீர் முகாமில் 543 மனுக்கள் பெறப்பட்டது

தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலக அதியன் கூட்டரங்கில் இன்று (ஆக.25) மக்கள் குறைதீர் கூட்டம் நடைபெற்றது இதில் பொதுமக்களிடமிருந்து புதிய குடும்ப அட்டை வேண்டுதல், வாரிசு சான்றிதழ், வேலை வாய்ப்பு, வீட்டுமனை பட்டா, முதியோர் ஓய்வூதியத் தொகை உட்பட பல்வேறு கோரிக்கைகள் குறித்தும் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு உதவித் தொகைகள்,உபகரணங்கள் வேண்டியும் மொத்தம் 543 மனுக்கள் வரப்பெற்றதாக ஆட்சியர் சதீஷ் தெரிவித்தார்.
News August 25, 2025
தருமபுரி: விவசாயிகள் குறைதீர் கூட்டம் தேதி அறிவிப்பு

தருமபுரி மாவட்ட விவசாயிகள் குறைதீர் நாள் கூட்டம் வரும் 28ஆம் தேதி முற்பகல் 11 மணியளவில் மாவட்ட ஆட்சியர் தலைமையில் புதிய மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற உள்ளது. எனவே தருமபுரி மாவட்டத்தைச் சேர்ந்த விவசாயிகள் இக்கூட்டத்தில் கலந்து கொண்டு வேளாண்மை தொடர்பான தங்களது குறைகளையும் கருத்துகளையும் எடுத்துக் கூறி பயனடையுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது என ஆட்சியர் சதிஸ் தெரிவித்துள்ளார்.