News August 25, 2025
“விழுப்புரம் சிறுதானிய சாகுபடி 1,506 எக்டர் குறைவு.”

விழுப்புரம் மாவட்டத்தில் இந்த ஆண்டு பருவமழை குறைவால் மானாவாரி பயிர் சாகுபடி கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டை விட 1,506 ஹெக்டேர் பரப்பளவில் சிறுதானியங்களான கம்பு, கேழ்வரகு, தினை ஆகியவற்றின் சாகுபடி குறைந்துள்ளது. நெல் மற்றும் எண்ணெய் வித்துக்களின் சாகுபடி அதிகரித்திருந்தாலும், போதிய மழையின்மை விவசாயிகளிடையே கவலையை ஏற்படுத்தியுள்ளது.
Similar News
News August 25, 2025
விழுப்புரம்: லஞ்சம் கேட்டால் இனி இதை பண்ணுங்க

விழுப்புரம் மக்களே சாதி, வருவாய், குடியிருப்பு மற்றும் மதிப்பீடு சான்றிதழ் வாங்குவதற்கு, பட்டா மாற்றம், சிட்டா உள்ளிட்ட பல்வேறு வேலைகளுக்காக நாம் வாழ்க்கையாகல் கண்டிப்பாக ஒருமுறையாவது தாசில்தார் அலுவலகத்திற்கு சென்று இருப்போம். அங்கு இவற்றை முறையாக செய்யாமல் அதிகாரிகள் லஞ்சம் கேட்டால் லஞ்ச ஒழிப்புத் துறையில் (04146-259216) புகாரளிக்கலாம். இந்த நல்ல தகவலை அனைவருக்கும் SHARE செய்து உதவுங்கள்.
News August 25, 2025
விழுப்புரம் காவல்துறை சார்பில் வாகன ஓட்டிகளுக்கு அறிவுறுத்தல்

சாலை விபத்துகளால் ஏற்படும் உயிர் இழப்புகளைத் தடுக்கும் நோக்கில், விழுப்புரம் மாவட்ட காவல்துறை வாகன ஓட்டிகளுக்கு முக்கிய அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளது. அதன்படி, நான்கு சக்கர வாகனங்களை இயக்கும்போது, இருக்கை பட்டையை (சீட் பெல்ட்) கட்டாயம் அணிய வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது. இது விபத்துக்களின்போது ஏற்படும் பாதிப்புகளைக் குறைத்து, பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
News August 25, 2025
செஞ்சி: புதிய அரசு தொழிற்பயிற்சி தொடக்க விழா

செஞ்சி விழுப்புரம் சாலையில் புதிய அரசு தொழிற்பயிற்சி நிலையத்தின் தொடக்க விழா இன்று நடைபெற்றது. தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை சார்பில் நடந்த இவ்விழாவில், செஞ்சி சட்டமன்ற உறுப்பினர் கே.எஸ். மஸ்தான் மற்றும் விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் ஷேக் அப்துல் ரகுமான் ஆகியோர் பங்கேற்றனர். செஞ்சி ஒன்றிய குழு தலைவர் விஜயகுமார் மற்றும் மேல்மலையனூர் சேர்மன் நெடுஞ்செழியன் உள்ளிட்டோரும் கலந்துகொண்டனர்.