News August 25, 2025

பாஜகவின் முதல் PM வாஜ்பாய் அல்ல: மணி சங்கர் அய்யர்

image

முன்னாள் பிரதமர் பி.வி.நரசிம்ம ராவ் வகுப்புவாத மனப்பான்மை கொண்டவர்; அவருடனான தனது அனுபவத்தில் இருந்து இது தெரியவந்ததாக காங்., மூத்த தலைவர் மணி சங்கர் அய்யர் விமர்சித்துள்ளார். அந்த வகையில், பாஜகவின் முதல் பிரதமர் வாஜ்பாய் அல்ல, நரசிம்மராவ்தான் எனக்கூறிய மணி சங்கர், ராஜீவ் காந்தி பிரதமர் பதவியில் தொடர முடியாமல் போனதற்கு, அவர் நல்ல மனிதராக இருந்ததுதான் காரணம் என்று தெரிவித்துள்ளார்.

Similar News

News August 25, 2025

இந்தியாவுக்கு இரட்டிப்பு மகிழ்ச்சி

image

கஜகஸ்தானில் நடைபெற்று வரும் ஆசிய துப்பாக்கி சுடுதல் சாம்பியன்ஷிப்பில் இந்தியாவுக்கு மற்றொரு தங்கம் கிடைத்துள்ளது. மகளிர் ட்ராப் ஷூட்டிங் இறுதிப்போட்டியில் நீரு தண்டா 43 முறை இலக்கை துல்லியமாக சுட்டு தங்க பதக்கத்தை வசப்படுத்தினார். இதே போட்டியில் இந்தியாவின் ஆஷிமா வெண்கலம் வென்றார். இதுவரை இந்தியா 28 தங்கம், 10 வெள்ளி, 12 வெண்கலம் என மொத்தம் 50 பதக்கங்களுடன் முதலிடத்தில் தொடர்கிறது.

News August 25, 2025

கட்சியில் இருந்து கூண்டோடு விலகல்

image

கரூரில் கட்சியில் இருந்து கூண்டோடு விலகியது தேமுதிகவில் பெரும் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. மாவட்ட செயலாளர் <<17504956>>அரவை முத்து<<>>, அதிமுகவில் இணைந்த நிலையில், அவரோடு மாவட்ட முக்கிய நிர்வாகிகளும் இணைந்துள்ளனர். மாவட்ட அவை தலைவர் ரங்கநாதன், குளித்தலை நகரச் செயலாளர் சுப்பிரமணியன், அரவக்குறிச்சி ஒன்றிய செயலாளர் சின்னசாமி, கடவூர் ஒன்றிய செயலாளர் ஆல்வின் உள்ளிட்ட 200 பேர் அதிமுகவில் ஐக்கியமாகியுள்ளனர்.

News August 25, 2025

பள்ளி மாணவன் மயங்கி விழுந்து மரணம்

image

நெல்லை மாவட்டம் கூடங்குளத்தில் 12-ம் வகுப்பு மாணவன் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பள்ளி முடிந்து வீடு திரும்பிய வழியில், மாணவன் நல்லமுத்து மயங்கி விழுந்துள்ளான். அருகில் இருந்தவர்கள் அவனை மீட்டு ஹாஸ்பிடலுக்கு கொண்டு சென்றுள்ளனர். ஆனால், நல்லமுத்து உயிரிழந்துவிட்டதாக டாக்டர்கள் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து போலீஸ் விசாரணை மேற்கொண்டு வருகிறது.

error: Content is protected !!