News August 25, 2025

கோவை:இளைஞர்களுக்கு ரூ.15,000 ஊக்கத்தொகை!

image

பிரதமரின் PMVBRY திட்டத்தின் கீழ், புதியதாக பணியில் சேரும் இளைஞர்களுக்கு ரூ.15,000 ஊக்கத்தொகை வழங்கப்படும். இ.பி.எப். பதிவு செய்யப்பட்ட நிறுவனங்களில் புதியதாக பணியில் சேரும் இளைஞர்கள் இந்த திட்டத்திற்கு தகுதியானவர்கள் ஆவர்.மேலும் விவரங்களுக்கு, https://pmvbry.epfindia.gov.in என்ற இணையதளத்தை அணுகலாம் என கோவை மண்டல தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி நிறுவனம் (EPF) அறிவித்துள்ளது. இதனை ஷேர் பண்ணுங்க!

Similar News

News August 25, 2025

மருதமலை முருகன் கோயில்.! நோய் தீர்க்கும் விபூதி.!

image

கோவை, மருதமலையில் மிகவும் பிரசித்தி பெற்ற அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோயில் அமைந்துள்ளது. இங்கு பாம்பாட்டிச்சித்தருக்கு அலங்காரத்துக்கு பயன்படுத்திய விபூதியை பிரசாதமாக தருகிறார்கள். நாக தோஷம், விஷப்பூச்சி கடிபட்டவர்கள் விபூதியை நீரில் கரைத்து சாப்பிட்டால் நோய் குணமாகும் என்பது நம்பிக்கை. மேலும், தோல் வியாதியால் பாதிக்கப்பட்டவர்கள் விபூதியை உடலில் பூசிக்கொள்கிறார்கள். மக்களே SHARE பண்ணுங்க!

News August 25, 2025

ஆகமவிதிகளை புறம்தள்ளி அருளும் ஈச்சனாரி விநாயகர்.!

image

ஆகம விதிகளின்படி மதியம் 2மணி முதல் 4மணி வரை நடை கோயில்களில் சாத்தப்படுவது வழக்கம். ஆனால், கோவை ஈச்சனாரி விநாயகர் ஆகம விதிகளை புறம்தள்ளி காலை 5மணி முதல் இரவு 10மணி வரை பக்தர்களுக்கு தொடர்ச்சியாக அருள் பாலிக்கிறர். இங்கு வழிப்பட்டால் வேண்டுதல் விரைவாக நிறைவேறும் என்பது ஐதீகம். விநாயகர் சதுர்த்திக்கு இந்த கோயிலுக்கு போங்க. இதை மற்ற பக்தர்ளுக்கு ஷேர் பண்ணுங்க.

News August 25, 2025

கோவை: ரூ.65,000 சம்பளத்தில் வேலை APPLY NOW

image

கோவை மக்களே, மத்திய அரசின் நிறுவனத்தில் ஐடிஐ முடித்தவர்களுக்கான பெரிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியது. பாரத் ஹெவி எலெக்ட்ரிக்கல் நிறுவனத்தில் தேசிய அளவில் செயல்படும் 11 ஆலைகளில் காலியாக உள்ள 515 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இதற்கு ரூ.29,500 முதல் ரூ.65,000 வரை சம்பளம் நிர்ணயிக்கப்படும். இதுகுறித்த மேலும் விவரங்கள் மற்றும் விண்ணப்பிக்க <>இங்கு கிளிக்<<>> பண்ணுங்க. கடைசி தேதி செப். 12 ஆகும். SHARE பண்ணுங்க!

error: Content is protected !!