News August 25, 2025

Health Tips: வெறும் வயிற்றில் இத குடிங்க.. இவ்வளவும் சரியாகும்!

image

தினமும் எழுந்தவுடன் வெந்தயம் ஊற வைத்த நீரை குடிக்கும் பழக்கம் சிலருக்கு இருக்கும். இந்த 1 கிளாஸ் வெந்தய நீர் குடிப்பதால் உடலுக்கு அவ்வளவு நன்மைகள் கிடைக்கின்றன ▶சர்க்கரையின் அளவைக் கட்டுப்படுத்த உதவும் ▶வயிற்று வலி, அசிடிட்டி, மலச்சிக்கல் போன்றவற்றை குறைக்கிறது ▶கெட்ட கொழுப்புகள் குறையும் ▶சரும நிறத்தை மேம்படுத்தவும், முகப்பரு நீங்கவும் உதவுகிறது ▶நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்

Similar News

News August 25, 2025

சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்தார் CM ஸ்டாலின்

image

நெல்லையில் ஆணவக்கொலை செய்யப்பட்ட கவினின் பெற்றோர், CM ஸ்டாலினை இன்று நேரில் சந்தித்தனர். கவின் படுகொலை செய்யப்பட்டபோது CM இரங்கல் தெரிவிக்காததும், தூத்துக்குடிக்கு சென்றபோது நேரில் செல்லாமல் போன் மூலம் ஆறுதல் கூறியதும் சர்ச்சையானது. இந்நிலையில், முதல்வரை சந்தித்த கவின் பெற்றோர், தனது மகனின் கொலையில் தொடர்புடைய அனைத்து குற்றவாளிகளையும் கைது செய்து, கடும் தண்டனை பெற்றுத்தர வலியுறுத்தினர்.

News August 25, 2025

BCCI – Dream 11 ஒப்பந்தம் முறிந்தது

image

நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட ஆன்லைன் கேமிங் ஒழுங்குமுறை மசோதாவுக்கு ஜனாதிபதியும் ஒப்புதல் வழங்கியுள்ளார். இந்நிலையில், இந்திய கிரிக்கெட் அணிக்கு 2023 முதல் ஸ்பான்சர்ஷிப் வழங்கி வந்த Dream 11 நிறுவனத்துடனான ஒப்பந்தத்தை கைவிட்டதாக BCCI தெரிவித்துள்ளது. இனி இதுபோன்ற நிறுவனங்களுடன் ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்படாது என்றும் கூறியுள்ளது. எனவே, புதிய ஸ்பான்சரை தேடும் முயற்சியில் BCCI இறங்கியுள்ளது.

News August 25, 2025

காதலர்களே… இனி கவலை வேண்டாம்.. இது உங்களுக்காக

image

தமிழகம் முழுவதும் உள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகங்களில் காதல் திருமணங்களை நடத்திக் கொள்ளலாம் என CPM மாநில செயலாளர் பெ.சண்முகம் தெரிவித்துள்ளார். மாநிலத்தில் சாதி மறுப்பு திருமணங்களுக்காக தனிப்பட்ட ஏற்பாடுகள் இல்லை என சாடிய அவர், காதலர்களுக்காக மார்க்சிஸ்ட் அலுவலகங்கள் 24 மணிநேரமும் திறந்தே இருக்கும் என்றார். சாதி ஆணவக்கொலைகள் அதிகரித்து வரும் நிலையில் இவ்வாறு கூறியுள்ளார்.

error: Content is protected !!