News August 25, 2025
திருத்தணியில் குவிந்த பக்தர்கள்

திருவள்ளூர் மாவட்டம் திருத்தணியில் உள்ள புகழ்பெற்ற திருத்தணி முருகன் கோயிலில் நேற்று வார விடுமுறை என்பதால், பக்தர்களின் கூட்டம் அதிகரித்து காணப்பட்டது. தமிழ்நாடு மட்டுமின்றி ஆந்திரா, கர்நாடகா போன்ற அதிகளவில் பக்தர்கள் வந்திருந்து வரிசையில் 2 மணிநேரம் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர். மூலவருக்கு சிறப்பு பூஜை செய்யப்பட்டது.
Similar News
News August 25, 2025
BREAKING- திருவள்ளூர்: 1வயது குழந்தை பரிதாப பலி

திருவள்ளூர் மாவட்டம் தாமரைப்பாக்கம் அருகே இன்று 1வயது குழந்தை விளையாடிக்கொண்டிருந்தது. அப்போது தரையில் இருந்த வண்டை விழுங்கியதால் மூச்சுக்குழாயில் வண்டு கடித்து குழந்தை உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியள்ளது. மேலும் சடலத்தை கைப்பற்றி வெங்கல் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர். குழந்தைகள் விளையாடும் போது பெற்றோர்கள் யாரேனும் உடன் இருக்க போலீஸ் அறிவுரை வழங்குகின்றனர்.
News August 25, 2025
திருவள்ளூர் சந்தையில் விலை நிலவரம்

திருவள்ளூர் இன்று காய்கறி, பழ விலை: வெங்காயம் ரூ.33–37, தக்காளி ரூ.61–67, பச்சைமிளகாய் ரூ.54–60, உருளைக்கிழங்கு ரூ.33–37, கேரட் ரூ.45–50, முட்டைகோஸ் ரூ.30–33, காலிஃபிளவர் ரூ.31–34, கத்திரிக்காய் ரூ.39–43, முருங்கைக்காய் ரூ.69–76. பழங்களில் ஆப்பிள் வாஷிங்டன் ரூ.276–305, சிம்லா ரூ.155–171, வாழை ரூ.69–76, மாம்பழம் ரூ.49–55, ஆரஞ்சு ரூ.63–70, திராட்சை ரூ.121–133, மாதுளை ரூ.132–146, பப்பாளி ரூ.36–39.
News August 25, 2025
திருவள்ளூர்: மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

2025-ஆம் ஆண்டிற்கான முதலமைச்சர் கோப்பை விளையாட்டு போட்டிகள் வருகின்ற 26.08.2025 முதல் 12.09.2025 திருவள்ளூர் மாவட்டத்தில் நடைபெற உள்ளன. மேலும் நீச்சல் போட்டியானது 27.08.2025 அன்று நடைபெறவிருந்த போட்டியானது வருகின்ற 04.09.2025 அன்று காலை 6.00 மணிக்கு திருவள்ளூர் மாவட்ட விளையாட்டரங்கத்தில் உள்ள நீச்சல் குள வளாகத்தில் நடைபெறும் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.