News August 25, 2025

தெரு நாய்களை பிடிக்கும் பணி துவக்கம்

image

திண்டிவனம் நகராட்சியில் அனைத்து வார்டுகளிலும் அதிக அளவில் தெரு நாய்கள் மற்றும் வெறி நாய்கள் சுற்றி வருவது பொது மக்கள் மத்தியில் அச்சுறுத்துலை ஏற்படுத்தி வந்தது.இதை தொடர்ந்து நகராட்சி சார்பில் அதே பகுதியில் தனியார் ஆட்கள் மூலம் தெரு நாய்களை வலைபோட்டு பிடிக்கும் நடவடிக்கை,சுகாதார அதிகாரி செந்தில் மேற்பார்வையில் நடந்தது. நேற்று மட்டும் 25 நாய்கள் பிடிக்கப்பட்டதாக நகராட்சி தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

Similar News

News August 25, 2025

செஞ்சி: புதிய அரசு தொழிற்பயிற்சி தொடக்க விழா

image

செஞ்சி விழுப்புரம் சாலையில் புதிய அரசு தொழிற்பயிற்சி நிலையத்தின் தொடக்க விழா இன்று நடைபெற்றது. தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை சார்பில் நடந்த இவ்விழாவில், செஞ்சி சட்டமன்ற உறுப்பினர் கே.எஸ். மஸ்தான் மற்றும் விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் ஷேக் அப்துல் ரகுமான் ஆகியோர் பங்கேற்றனர். செஞ்சி ஒன்றிய குழு தலைவர் விஜயகுமார் மற்றும் மேல்மலையனூர் சேர்மன் நெடுஞ்செழியன் உள்ளிட்டோரும் கலந்துகொண்டனர்.

News August 25, 2025

விழுப்புரம்: GH சரி இல்லையா? ஒரு கால் போதும்…

image

அரசு மருத்துவ மனைகளை நம்பி தினமும் ஆயிரக்கணக்கான மக்கள் சிகிச்சைக்கு வந்து செல்லும் நிலையில், சில நேரங்களில் அங்கு சிகிச்சை சரி இல்லை என்ற புகாரும் வருகிறது. அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை சரி இல்லை என்றாலோ, பணியாளர்கள் சரியாக நடந்துகொள்ளவில்லை என்றாலோ பொதுமக்கள் TOLL FREE 104 எண்ணில் புகார் செய்யலாம். தெரிந்தவர்களுக்கு ஷேர் பண்ணுங்க. <<17511561>>தொடர்ச்சி<<>>

News August 25, 2025

புகார் எண் 104ன் சேவைகள்

image

இந்த 104 எண் மூலம் தரமற்ற சேவை தரும் மருத்துவமனைகள், மருந்துக்கடைகள், ஓட்டல்கள் பற்றியும் புகார் செய்யலாம். மேலும் உடல் நலம் சார்ந்த சந்தேகங்கள் எதுவாக இருந்தாலும் இங்குள்ள மருத்துவர்களை தொடர்பு கொண்டு பேசலாம். மருத்துவத்துறையில் மகப்பேறு, இருதயம், நீரிழிவு, காது மூக்கு தொண்டை, குடல்இறப்பை, தோல் மருத்துவபிரிவுகளைச் சேர்ந்த 20 மருத்துவ நிபுணர்கள் 24 மணிநேரமும் தயார் நிலையில் இருப்பார்கள். SHARE

error: Content is protected !!