News August 25, 2025
புளியங்குடியில் புதிய வார்டு நிர்வாகிகள் நியமனம்

புளியங்குடியில், தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் மற்றும் மனிதநேய மக்கள் கட்சியின் 26வது வார்டு புதிய நிர்வாகிகள் தேர்வு 26வது வார்டு ஜின்னா நகர் 7வது தெருவில் அமைந்துள்ள அன்னை பாத்திமா ரலி மதரசாவில் நடைபெற்றது. இதில் நகர தலைவர் சையத் அலி பாஷா தலைமையில் 26 வது வார்டு புதிய நிர்வாகிகள் தேர்வுசெய்யப்பட்டனர். நிகழ்வில் மைதீன் அப்துல் காதர், நகரப் பொருளாளர் முகைதீன் ஆகியோர் பங்கேற்றனர்.
Similar News
News December 21, 2025
தென்காசி: ரயில் முன் பாய்ந்து தற்கொலை முயற்சி!

அழகப்பபுரம் அருகே செங்கோட்டை – திருநெல்வேலி பேசஞ்சர் ரயிலில் அடையாளம் தெரியாத ஆண் (டிச 21) ரயில் முன்பு பாய்ந்து தற்கொலைக்கு முயன்றதால் தலையில் அடிபட்டு உயிருக்கு ஆபத்தான நிலையில் தென்காசி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டடார். பின் மேல் சிகிச்சைக்காக திருநெல்வேலி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார். இவர் யார் என்பது குறித்து ரயில்வே போலீஸார் விசாரனை நடத்தி வருகின்றனர்.
News December 21, 2025
தென்காசி: ஆதார் – பான் கார்டு இணைப்பு 2 நிமிஷத்துல!

தென்காசி மக்களே, மத்திய அரசு பான்கார்டுடன் ஆதாரை டிசம்பர்.31க்குள் இணைக்க வேண்டும் என அறிவுறுத்தி உள்ளது.
1. <
2. PAN, Aadhaar எண், பெயர் போன்ற விவரங்கள் சரியாக பதிவு செய்யுங்க.
3. Aadhaar OTP மூலம் உறுதிசெய்து “Submit” செய்யவும். இணைப்பு சீராக முடிந்தால் “Link Successful” தோன்றும். அவ்வளவுதான்! இதை உடனே அனைவருக்கும் SHARE பண்ணுங்க.
News December 21, 2025
தென்காசி: விஷம் குடித்த சிறுவன் உயிரிழப்பு!

சுரண்டை பகுதியை சேர்ந்த தம்பதியினர் கோவிந்தராஜ் – உமா (31). இவர்களுக்கு தர்ஷிக் முகுந்த் (9) என்ற மகன் உள்ளார். உமாவின் தயார் பெயரில் உள்ள வீட்டை அடமானம் வைத்து கடன் பெற்றதாக கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த உமா, தனது மகனுக்கு விஷம் கொடுத்துவிட்டு தானும் விஷம் அருந்தி தற்கொலை செய்து கொண்டார். மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த தர்ஷிக் முகுந்த் உயிரிழந்தார். சாம்பவர் வடகரை போலீஸார் விசாரனை.


