News August 25, 2025
சிங்கம் தூங்கக்கூடாது: விஜய்யை சாடிய சரத்குமார்

கள அரசியலில் ஈடுபடவில்லை என்ற குற்றச்சாட்டுக்கு, சிங்கம் வேட்டைக்கு மட்டுமே வெளியில் செல்லும் என்று விஜய் பதிலளித்திருந்தார். இந்நிலையில், இதுகுறித்து பேசிய சரத்குமார், இந்த சிங்கம் வேட்டைக்கு மட்டும்தான் போகுமாம், பின்பு படுத்து தூங்கி விடுமாம் என்று விமர்சித்துள்ளார். சிங்கம் சிங்கமாக இருக்க வேண்டும், தூங்கக்கூடாது என்றும் அவர் சாடியுள்ளார். விஜய்யின் அரசியல் பற்றி உங்கள் கருத்து என்ன?
Similar News
News August 25, 2025
அறிவு வளர சதுர்த்தியிலிருந்து இத தினமும் செய்யுங்க..

விநாயகர் வழிபாட்டில் தோப்புக்கரணம் மிக முக்கியமானது. இதற்கு பின்னணியில் ஒரு பெரிய அறிவியல் இருப்பதாக வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர். இதை செய்வதன் மூலம் உடல் முழுவதும் ரத்த ஓட்டம் சீராவதுடன், மூளையின் செயல்பாடு, ஞாபக சக்தி, மற்றும் உடலின் தசைகள் வலுப்பெறுகிறதாம். இத்துடன், செரிமானம் சீராவதுடன், தூக்கமின்மையும் சரியாகிறது. தினமும் 15 – 50 தோப்பு கரணம் போடுவது பெரும் பலனை பெற்றுத்தரும்
News August 25, 2025
பகல் 12 மணி வரை இன்று.. முக்கிய செய்திகள்

✪<<17509267>>திமுகவில் <<>>இணைகிறேனா? செல்லூர் ராஜு ஓபன் டாக்
✪சிங்கம் <<17508888>>தூங்கக்கூடாது<<>>.. விஜய்யை சாடிய சரத்குமார்
✪நாடாளுமன்றத்தை <<17508838>>முடக்குவது <<>>நல்லதல்ல.. மத்திய அமைச்சர் அமித்ஷா
✪தங்கம் விலை <<17509891>>சவரனுக்கு <<>>₹80 குறைந்தது
✪SA 20 லீக் தொடர்: <<17508836>>பிரிட்டோரியா <<>>கேபிடல்ஸ் அணியின் பயிற்சியாளரான கங்குலி ✪KGF புகழ் <<17509653>>தினேஷ் <<>>மங்களூரு காலமானார்.
News August 25, 2025
மருத்துவமனையில் பழம்பெரும் தலைவர்… தீவிர சிகிச்சை

இந்திய கம்யூனிஸ்ட் மூத்த தலைவர் நல்லகண்ணுவின் உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக நேற்று வெங்கடேஸ்வரா மருத்துவமனை அறிக்கை வெளியிட்டது. இந்நிலையில், நல்லகண்ணுவுக்கு வயது மூப்பின் காரணமாக நுரையீரல் தொற்று ஏற்பட்டுள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டு, அவருக்கு மூத்த மருத்துவர்கள் அடங்கிய குழு தீவிர சிகிச்சை அளித்து வருகிறது.