News August 25, 2025
தமிழகத்தில் வெப்பநிலை அதிகரிக்க வாய்ப்பு: IMD

தமிழகத்தில் சில இடங்களில் இன்று முதல் 28-ம் தேதி வரை வழக்கத்தை விட 5 டிகிரி ஃபாரன்ஹீட் வரை வெப்பநிலை அதிகரிக்க வாய்ப்பு உள்ளதாக IMD தெரிவித்துள்ளது. மேலும், மேற்கு திசை காற்றில் நிலவும் வேக மாறுபாடு காரணமாக, தமிழகத்தில் ஓரிரு இடங்களில் இன்று முதல் 30-ம் தேதி வரை லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் எனவும் கணிக்கப்பட்டுள்ளது.
Similar News
News August 25, 2025
RECIPE: உடல் எடையை ஈசியாக குறைக்கும் வரகரிசி இட்லி!

◆செரிமானத்தை மேம்படுத்தவும், உடல் எடையை குறைக்கவும் வரகரிசி பெருமளவில் உதவுகிறது.
➥வரகரிசியையும், உளுந்தையும் தனித்தனியாக 4 மணி நேரம் ஊறவைத்து அரைத்து பிறகு உப்பு சேர்த்து கொள்ளவும்
➥கண்டிப்பாக மாவை குறைந்தது 6 மணி நேரமாவது புளிக்க வைக்க வேண்டும்
➥புளித்த மாவில் இட்லி ஊற்றி சாப்பிடலாம். ரத்த சர்க்கரை அளவை கட்டுப்படுத்த உதவுவதால், இது நீரிழிவு நோயாளிகளுக்கு நல்லது.
News August 25, 2025
BREAKING: விடுமுறை அறிவித்தது தமிழக அரசு

தமிழ்நாட்டில் நேற்று பிறை தெரிந்ததால், வரும் செப்.5-ம் தேதி இஸ்லாமியர்களின் மிக முக்கியமான பண்டிகையான ‘மிலாடி நபி’ கொண்டாடப்படும் என்று தமிழ்நாடு அரசின் தலைமை காஜி சற்றுமுன் அறிவித்துள்ளார். இதனால், அன்று பள்ளி, கல்லூரிகள், அரசு அலுவலகங்களுக்கு அரசு பொதுவிடுமுறை அளிக்கப்படுகிறது. முகமது நபியின் பிறந்த நாளான (மிலாடி நபி) அன்று இஸ்லாமியர்கள், ஏழை மக்களுக்கு உணவு, உடைகளை தானமாக வழங்குவார்கள்.
News August 25, 2025
திமுகவில் இணைகிறேனா? செல்லூர் ராஜு ஓபன் டாக்

தென்மாவட்ட சுற்றுப்பயணத்தின்போது செல்லூர் ராஜுவை, EPS தனது காரில் ஏற்க மறுத்த வீடியோ வைரலாகி கட்சியில் குழப்பத்தை ஏற்படுத்தியது. இதனால் அவர் திமுகவில் இணையவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகின. இந்நிலையில், இதற்கு விளக்கமளித்துள்ள செல்லூர் ராஜு, பாதுகாவலர்களின் கட்டுப்பாட்டின் படியே தான் EPS காரில் ஏறவில்லை என்றார். மேலும், திமுகவில் தான் இணையவுள்ளதாக வெளியான தகவலில் கடுகளவும் உண்மையில்லை என்றார்.