News August 25, 2025

SKவுடன் என்றும் துணை நிற்பேன்: அனிருத் நெகிழ்ச்சி

image

மதராஸி படத்தில் சிவகார்த்திகேயனின் வேறு ஒரு அவதாரத்தை பார்ப்பீர்கள் என அனிருத் தெரிவித்துள்ளார். மதராஸி இசைவெளியீட்டு விழாவில் பேசிய அவர் SK இன்னைக்கு இந்த உயரத்துக்கு வளர்வதற்கு அவரின் தூய்மையான உள்ளமே காரணம் எனவும் அனிருத் நெகிழ்ந்துள்ளார். என்னைக்கோ ஒரு நாள் நான் field out ஆவேன் என கூறிய அவர் அன்னைக்கு எஸ்.கே-வோட வெற்றியை எண்ணி சந்தோஷப்படுவேன் என மகிழ்ச்சியுடன் கூறியுள்ளார்.

Similar News

News August 25, 2025

வளைகாப்பும், கண்ணாடி வளையலும்! ரகசியம் இதுதான்?

image

எவ்வளவு பெரிய பணக்காரராக இருந்தாலும், வளைக்காப்பின் போது, பெண்களுக்கு கண்டிப்பாக கண்ணாடி வளையல் தான் அணிவிப்பார்கள். இது ஏன் என நீங்கள் யோசித்ததுண்டா? இதன் பின்னணியில் ஆன்மீக ரீதியில் பல விளக்கங்கள் கூறப்பட்டாலும், இதற்கு ஒரு அறிவியல் விளக்கமும் உண்டு. அதாவது, கண்ணாடி வளையலில் இருந்து எழும் ஒலி குழந்தையின் மூளை தூண்டச்செய்து, அதன் வளர்ச்சிக்கு உதவும் என கூறப்படுகிறது. SHARE IT.

News August 25, 2025

விஜய் பட சாதனையை முறியடித்த ரஜினியின் ‘கூலி’..!

image

விஜய் நடிப்பில் கடைசியாக வெளியான ‘கோட்’ படம் ஒட்டுமொத்தமாக ₹465 கோடி வசூலித்திருந்தது. இந்த வசூலை ரஜினியின் ‘கூலி’ படம் 11 நாள்களிலேயே முறியடித்திருப்பதாக சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. மேலும், படத்தின் வசூல் ₹500 கோடியை நெருங்கி வருவதாகவும் கூறப்படுகிறது. ரஜினி நடிப்பில் ஏற்கெனவே ‘2.O’ மற்றும் ‘ஜெயிலர்’ ஆகிய படங்கள் ₹600 கோடிக்கு மேல் கலெக்‌ஷனாகி இருப்பது குறிப்பிடத்தக்கது.

News August 25, 2025

இனி ஆம்புலன்ஸை தாக்கினால் சிறை தண்டனை

image

திருச்சி EPS பிரச்சாரத்தில் ஆம்புலன்ஸ் ஓட்டுநரை அதிமுகவினர் தாக்கிய சம்பவம் சர்ச்சையானது. இந்நிலையில், ஆம்புலன்ஸ் வாகனம் & ஓட்டுநர் மீது தனி நபரோ, கூட்டமாகவோ தாக்குதல் நடத்தினால் 3-10 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்படும் என்று அரசு எச்சரித்துள்ளது. கைதாகுபவர்கள் மீது ஜாமினில் வெளிவர முடியாத பிரிவுகளின் கீழ் வழக்குப்பதியப்படும் எனவும் மக்கள் நல்வாழ்வுத்துறை தெரிவித்துள்ளது.

error: Content is protected !!