News August 25, 2025
விரைவில் இந்தியா வரும் உக்ரைன் அதிபர்

PM மோடியின் அழைப்பை ஏற்று உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி இந்தியா வர உள்ளார். இந்த தகவலை பகிர்ந்த அந்நாட்டு தூதர் அலெக்சாண்டர் போலிஷ்சுக், பயணத் தேசி விரைவில் இறுதி செய்யப்படும் எனவும் தெரிவித்துள்ளார். இந்த பயணத்தில் ரஷ்யாவுடனான போர் மற்றும் இந்தியா – உக்ரைன் உறவு குறித்து, மோடியுடன் ஜெலன்ஸ்கி ஆலோசிக்க உள்ளதாக கூறப்படுகிறது. போரை நிறுத்த ஏற்கனவே புதினிடமும் மோடி ஆலோசித்துள்ளது கவனிக்கத்தக்கது.
Similar News
News August 25, 2025
கல்கி இயக்குநருடன் கைகோர்க்கும் ரஜினிகாந்த்?

லால் சலாம், வேட்டையன், கூலி ஆகிய படங்களுக்கு கிடைத்த கலவையான விமர்சனங்களால், அடுத்த படத்தின் கதை தேர்வில் ரஜினி தீவிர கவனம் செலுத்துகிறாராம். இந்நிலையில் மகாநதி (நடிகையர் திலகம்), கல்கி 2898 ஆகிய படங்களின் இயக்குநர் நாக் அஷ்வின், ரஜினியிடம் கதை சொல்லியுள்ளாராம். இது அவருக்கு பிடித்துபோக, கதையை டெவலப் செய்ய சொல்லியுள்ளாராம். எனவே ரஜினியின் அடுத்த படத்தை நாக் அஷ்வின் இயக்குவார் என கூறப்படுகிறது.
News August 25, 2025
அறிவு வளர சதுர்த்தியிலிருந்து இத தினமும் செய்யுங்க..

விநாயகர் வழிபாட்டில் தோப்புக்கரணம் மிக முக்கியமானது. இதற்கு பின்னணியில் ஒரு பெரிய அறிவியல் இருப்பதாக வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர். இதை செய்வதன் மூலம் உடல் முழுவதும் ரத்த ஓட்டம் சீராவதுடன், மூளையின் செயல்பாடு, ஞாபக சக்தி, மற்றும் உடலின் தசைகள் வலுப்பெறுகிறதாம். இத்துடன், செரிமானம் சீராவதுடன், தூக்கமின்மையும் சரியாகிறது. தினமும் 15 – 50 தோப்பு கரணம் போடுவது பெரும் பலனை பெற்றுத்தரும்
News August 25, 2025
பகல் 12 மணி வரை இன்று.. முக்கிய செய்திகள்

✪<<17509267>>திமுகவில் <<>>இணைகிறேனா? செல்லூர் ராஜு ஓபன் டாக்
✪சிங்கம் <<17508888>>தூங்கக்கூடாது<<>>.. விஜய்யை சாடிய சரத்குமார்
✪நாடாளுமன்றத்தை <<17508838>>முடக்குவது <<>>நல்லதல்ல.. மத்திய அமைச்சர் அமித்ஷா
✪தங்கம் விலை <<17509891>>சவரனுக்கு <<>>₹80 குறைந்தது
✪SA 20 லீக் தொடர்: <<17508836>>பிரிட்டோரியா <<>>கேபிடல்ஸ் அணியின் பயிற்சியாளரான கங்குலி ✪KGF புகழ் <<17509653>>தினேஷ் <<>>மங்களூரு காலமானார்.