News August 25, 2025

கோவை: பாலியல் சீண்டல்.. ஆசிரியர்கள் மீது போக்சோ!

image

கோவை: பொள்ளாச்சி அருகே உள்ள ஒரு பள்ளியில் பணியாற்றும் இரு ஆசிரியர்கள், பள்ளி மாணவிகளிடம் பாலியல் சீண்டலில் ஈடுபடுவதாகவும், அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் மாணவிகள் பேசிய வீடியோ வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில் அந்த 2 ஆசிரியர்கள் மீது போக்சோ உள்ளிட்ட 2 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Similar News

News August 26, 2025

ஆணவ படுகொலைகளுக்கு தமிழக அரசே காரணம்- தமிழிசை!

image

கோவை விமான நிலையத்தில் நேற்று செய்தியாளர்கள் இடையே பேசிய பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் தமிழகத்தில் நடைபெறும் ஆணவ படுகொலைகளை தடுக்க கூட்டணியில் அங்கம் வகித்துள்ள திமுகவிடம் விடுதலை சிறுத்தைகள் கட்சியினா் ஏன் கோரிக்கை விடுக்கவில்லை? இதற்காக ஏன் சட்டம் இயற்றவில்லை? ஆணவப் படுகொலைகளுக்கு தமிழக அரசின் அஜாக்கிரதையும், சட்டம்- ஒழுங்கும்தான் காரணங்களாகும் என்றார்.

News August 26, 2025

கோவை: வெறிநாய் தொல்லையா..? உடனே CALL!

image

தமிழகத்தில் கடந்த 6 மாதங்களில் மட்டும் 18 பேர் நாய் கடியால் உயிரிழந்துள்ளனர். அதிகபட்சமாக 19,250 பேரை தெருநாய்கள் தாக்கி கடித்திருப்பதாக, பொது சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது. எனவே, கோவை மாநகராட்சி சார்பில் 98437 89491 ரேபிஸ் ஹாட்லைன் எண் செயல்பாட்டில் உள்ளது. இதில் வெறி நாய் கடி, கடித்த பின்பு செய்ய வேண்டிய முதலுதவி சிகிச்சை உள்ளிட்ட தகவல்களை பெறலாம். இந்த பயனுள்ள தகவலை SHARE பண்ணுங்க!

News August 26, 2025

நாளை கோவையில் மழைக்கு வாய்ப்பு !

image

ஒடிசா – மேற்கு வங்காள கடலோரப் பகுதிகளுக்கு அப்பால் உள்ள வடமேற்கு வங்கக் கடல் பகுதியில் அடுத்த 48 மணி நேரத்தில் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.
இந்த நிலையில் தமிழ்நாட்டில் நாளை மற்றும் நாளை மறுநாள் (ஆக.27,28) கோவை மற்றும் நீலகிரி மாவட்டத்தின் மலைப் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!