News August 24, 2025

திருப்பத்தூர் இரவு ரோந்து செல்லும் போலீசார் விவரம்!

image

திருப்பத்தூர் மாவட்டத்தில் இன்று (ஆகஸ்ட் 24) இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.

Similar News

News August 25, 2025

திருப்பத்தூர்: +2 போதும், ரூ.81,100 சம்பளத்தில் வேலை!

image

எல்லை பாதுகாப்பு படையில் (BSF) ஹெட் கான்ஸ்டபிள் பிரிவில் ரேடியோ ஆப்பரேட்டர், ரேடியோ மெக்கானிக் பதவிக்கு 1121 காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு +2 மற்றும் ITI படித்த 18 முதல் 25 வயதுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். இந்த பணிக்கு சம்பளமாக ரூ.25,500-81,100 வரை வழங்கப்படும். விருப்பமுள்ளவர்கள் செப்டம்பர் 23ம் தேதிக்குள் இந்த <>லிங்கில் <<>>விண்ணப்பிக்கலாம். மற்றவர்களும் தெரிந்துகொள்ள ஷேர் பண்ணுங்க.

News August 25, 2025

திருப்பத்தூர்: பாலாற்றில் சாமி சிலைகள் கண்டெடுப்பு

image

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த கொடையாஞ்சி பகுதியில் உள்ள பாலாற்றங்கரையில் இருந்து நேற்று (24.08.2025) சாமி சிலைகளை அப்பகுதி மக்கள் கண்டுள்ளனர். உடனடியாக இதுகுறித்து அப்பகுதி மக்கள் வாணியம்பாடி வருவாய்துறையினருக்கு தகவல் அளித்துள்ளனர். இந்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்த வருவாய்துறையினர் பாலாற்றில் இருந்து 8 வெவ்வேறு விதமாக 4 அடி கொண்ட பழங்கால சிலைகளை கைப்பற்றினர்.

News August 25, 2025

வாணியம்பாடி அருகே பனை மரத்தில் மோதி விபத்து!

image

திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி அடுத்த சிக்கனம்குப்பம் அருகே மது போதையில் இருசக்கர வாகனத்தை ஓட்டி வந்த மூன்று இளைஞர்கள் சாலையில் இருந்த பனை மரத்தில் மோதி நிலை தடுமாறி கீழே விழுந்தனர். இதை கண்ட பகுதி மக்கள் உடனடியாக அவர்களை 108 ஆம்புலன்ஸ் வரவைத்து வாணியம்பாடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து அம்பலூர் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

error: Content is protected !!