News August 24, 2025

BIG BREAKING: வங்கி கடன்.. அரசின் HAPPY NEWS

image

முதல் முறையாக கடன் கேட்டு விண்ணப்பிக்கும் நபருக்கு வங்கி கடன்களுக்கான குறைந்தபட்ச CIBIL ஸ்கோர் தேவையில்லை என மத்திய நிதியமைச்சகம் தெரிவித்துள்ளது. இதனால், வங்கிகள் இனி கடன் கேட்டு விண்ணப்பிக்கும் நபரின் CIBIL ஸ்கோர் 0 ஆக இருந்தாலும், லோனை திருப்பி செலுத்துவதற்கான ஆவணங்களை மட்டும் ஆராய்ந்து லோன் வழங்க வேண்டும். தேவையில்லாத காரணங்களை கூறி விண்ணப்பத்தை நிராகரிக்கக் கூடாது என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Similar News

News August 25, 2025

கடவுளைக் காண 21 பேர் உயிர்த்தியாகம்?

image

ஆயுள் தண்டனை கைதியான சந்தா ராம்பால் என்ற சாமியாரின் புத்தகத்தை, கர்நாடகாவைச் சேர்ந்த துகாரம் என்பவர் படித்துள்ளார். இதனையடுத்து, இவர் உள்பட 21 பேர், கடவுளைக் காண்பதற்காக உயிர்த்தியாகம் செய்யவுள்ளதாக கூறி வந்துள்ளனர். இதன்பேரில் போலீஸார் விசாரித்தனர். அப்போது அவர்களுடன் நடத்தப்பட்ட பேச்சுவார்த்தைக்கு அடுத்து, இம்முடிவை அவர்கள் கைவிட்டுள்ளனர். என்றுதான் மூடநம்பிக்கைகள் முடிவுக்கு வருமோ?

News August 25, 2025

RECIPE: உடல் எடையை ஈசியாக குறைக்கும் வரகரிசி இட்லி!

image

◆செரிமானத்தை மேம்படுத்தவும், உடல் எடையை குறைக்கவும் வரகரிசி பெருமளவில் உதவுகிறது.
➥வரகரிசியையும், உளுந்தையும் தனித்தனியாக 4 மணி நேரம் ஊறவைத்து அரைத்து பிறகு உப்பு சேர்த்து கொள்ளவும்
➥கண்டிப்பாக மாவை குறைந்தது 6 மணி நேரமாவது புளிக்க வைக்க வேண்டும்
➥புளித்த மாவில் இட்லி ஊற்றி சாப்பிடலாம். ரத்த சர்க்கரை அளவை கட்டுப்படுத்த உதவுவதால், இது நீரிழிவு நோயாளிகளுக்கு நல்லது.

News August 25, 2025

BREAKING: விடுமுறை அறிவித்தது தமிழக அரசு

image

தமிழ்நாட்டில் நேற்று பிறை தெரிந்ததால், வரும் செப்.5-ம் தேதி இஸ்லாமியர்களின் மிக முக்கியமான பண்டிகையான ‘மிலாடி நபி’ கொண்டாடப்படும் என்று தமிழ்நாடு அரசின் தலைமை காஜி சற்றுமுன் அறிவித்துள்ளார். இதனால், அன்று பள்ளி, கல்லூரிகள், அரசு அலுவலகங்களுக்கு அரசு பொதுவிடுமுறை அளிக்கப்படுகிறது. முகமது நபியின் பிறந்த நாளான (மிலாடி நபி) அன்று இஸ்லாமியர்கள், ஏழை மக்களுக்கு உணவு, உடைகளை தானமாக வழங்குவார்கள்.

error: Content is protected !!