News August 24, 2025
தேர்தல் ஆதரவு.. அதிமுகவுக்கு திருமாவளவன் கடிதம்

துணை ஜனாதிபதி தேர்தலில் சுதர்சன் ரெட்டிக்கு ஆதரவு கேட்டு ADMK MP-க்களுக்கு திருமாவளவன் கடிதம் எழுதியுள்ளார். கட்டாயப்படுத்தி பதவி விலக வைத்து பாஜகவின் பிடியில் தற்போது வீட்டு சிறையில் இருக்கும் ஜெகதீப் தன்கரின் நிலைதான், நாளை தமிழகத்தை சேர்ந்த CP ராதாகிருஷ்ணனுக்கும் ஏற்படும் என ஆருடம் தெரிவித்தார். முன்னதாக, NDA-வின் CPR-க்கு TN MP-க்கள் ஆதரவு அளிக்க வேண்டும் என EPS வலியுறுத்தியிருந்தார்.
Similar News
News August 25, 2025
அப்போ வாக்கு திருட்டு! இப்போ ஆட்சி திருட்டு: கார்கே காட்டம்

வாக்குத் திருட்டைத் தொடர்ந்து இப்போது ஆட்சி திருட்டில் பாஜக ஈடுபட்டுள்ளதாக மல்லிகார்ஜுன கார்கே குற்றம்சாட்டியுள்ளார். தீவிர குற்றப் புகாரில் கைதாகி, 30 நாள்கள் காவலில் வைக்கப்படும் பிரதமர், முதல்வர்கள், அமைச்சர்களை பதவி நீக்க வகை செய்யும் மசோதாவை சுட்டிக்காட்டி இந்த குற்றச்சாட்டை அவர் முன் வைத்துள்ளார். ஜனநாயகத்தை சீர்குலைக்க கைது நடவடிக்கையை கருவியாக பாஜக பயன்படுத்துவதாகவும் சாடியுள்ளார்.
News August 25, 2025
தவெக மாநாட்டிற்கு சென்று திரும்பிய இளைஞர் உயிரிழப்பு

மதுரையில் நடைபெற்ற தவெக மாநாட்டில் பங்கேற்று திரும்பிய ஜெயசூர்யா என்ற இளைஞர் விபத்தில் உயிரிழந்துள்ளார். திருச்சி அருகே நடத்த விபத்தில் காயமடைந்த அவர், ஹாஸ்பிடலில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக கூறப்படுகிறது. ஏற்கெனவே மாநாட்டுக்கு சென்று திரும்பிய வழியில் பிரபாகரன், ரித்திக் ஆகியோர் பலியான நிலையில், தற்போது மூன்றாவதாக ஒருவர் உயிரிழந்துள்ளது, தவெக தொண்டர்களிடம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
News August 25, 2025
வசூலை அள்ளியதில் ‘கூலி’ படத்துக்கு எத்தனாவது இடம்?

இந்த ஆண்டில் வெளியான படங்களில் அதிக வசூல் செய்த படமாக ‘சாவா’ பாடம் உள்ளது. ₹808 கோடியுடன் சாவா முதல் இடத்திலும், குறைந்த பட்ஜெட்டில் தயாராகி வசூலை வாரிக்குவித்த ‘சயாரா’ ₹542 கோடியுடன் 2-ம் இடத்திலும் உள்ளன. ரஜினியின் ‘கூலி’ படம் வெளியாகி 10 நாட்களில் ₹468 கோடியை வசூல் செய்து 3-வது இடத்தில் உள்ளது. கூலியுடன் வெளியான வார்(₹300 கோடி), ஹவுஸ்புல் 5(₹292 கோடி) ஆகிய படங்கள் அடுத்த வரிசையில் உள்ளன.