News August 24, 2025

அனைத்து பள்ளிகளுக்கும் ஒருநாள் விடுமுறை

image

கடந்த 2 நாள்களாக விடுமுறையில் இருக்கும் மாணவர்களுக்கு, அடுத்த 2 நாள் கழித்து மீண்டும் விடுமுறை வருகிறது. ஆம், நாளை, நாளை மறுநாள் என 2 நாள்கள் மட்டுமே பள்ளிகள் இயங்கும். புதன்கிழமை (27-ம் தேதி) விநாயகர் சதுர்த்தி வருவதால், அன்று அரசு விடுமுறையாகும். 27-ம் தேதி பள்ளி, கல்லூரிகள், அரசு அலுவலகங்கள் அனைத்திற்கும் மாநிலம் முழுவதும் விடுமுறையாகும்.

Similar News

News August 25, 2025

அனுராக் தாகூர் கண்டுபிடிப்பு சாதாரண விசயமல்ல: சு.வெ

image

அனுமன்தான் முதல் முதலில் விண்வெளிக்கு போனது என்று <<17507921>>அனுராக் <<>>தாகூர் கண்டறிந்துள்ளது சாதாரண விசயமல்ல என்று சு.வெங்கடேசன் விமர்சித்துள்ளார். பாஜகவினரின் அறிவு செயல்பாடு நாளுக்கு நாள் அபாரமாகிக் கொண்டிருக்கிறது என கிண்டலடித்த அவர், நீல் ஆம்ஸ்ட்ராங் பெயரை அறிவியல் பாடத்திலிருந்து நீக்கும் சுற்றறிக்கையை தர்மேந்திர பிரதானிடமிருந்து விரைவில் எதிர்பார்க்கலாம் என்று தெரிவித்துள்ளார்.

News August 25, 2025

இதுவரை இல்லாத உச்சம்.. ₹5000 உயர்வு

image

வெள்ளி விலை வரலாற்றில் இதுவரை இல்லாத அளவிற்கு உயர்ந்து புதிய உச்சத்தை எட்டியுள்ளது. கடந்த 20-ம் தேதி வெள்ளி விலை கிராமுக்கு ₹125-க்கும், கிலோ வெள்ளி ₹1,25,000-க்கும் விற்பனையானது. ஆனால், கடந்த 5 நாள்களில் மட்டும் கிராமுக்கு ₹5, கிலோவுக்கு ₹5000 உயர்ந்துள்ளது. வெள்ளி நகைகளையும் இனி வங்கிகளில் அடகு வைக்கலாம் என RBI பரிந்துரை அளித்துள்ளதால், வெள்ளி விலை அதிகரித்து வருகிறது.

News August 25, 2025

அதிமுக கூட்டணியை மாற்றுவது நல்லது: திருமா

image

பாஜக கூட்டணியில் இருந்து அதிமுக விலக வேண்டும் என திருமாவளவன் வலியுறுத்தியுள்ளார். பாஜகவால் அதிமுகவுக்கு ஆபத்து என நாங்கள் சொன்னபோது விழுந்து புரண்டிய அக்கட்சியினர், தற்போது அதே கருத்தை விஜய் கூறும்போது அமைதியாக இருப்பது ஏன் என கேள்வி எழுப்பினார். அதிமுகவின் வாக்கு வங்கி சிதறாமல் இருக்க ஒரே வழி, பாஜக கூட்டணியில் இருந்து விலகுவதுதான். இல்லையென்றால் அதிமுகவை காப்பாற்ற முடியாது என்றார்.

error: Content is protected !!