News April 8, 2024
இதை செய்தால் மட்டுமே செங்கலை கொடுப்பேன்

தமிழகத்தில் ஏப்ரல் 19 ஆம் தேதி தேர்தல் நடைபெற உள்ள நிலையில், அனைத்து கட்சியினரும் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், தருமபுரி பிரசாரத்தில் பேசிய உதயநிதி, மதுரையில் எய்ம்ஸ் அமைக்க பாஜகவினரும், எடப்பாடியும் ஒரு செங்கல் நட்டார்கள். அதை நான் எடுத்து வந்துவிட்டேன். எய்ம்ஸ் மருத்துவமனை கட்டினால் மட்டுமே அந்த செங்கலை திருப்பி கொடுப்பேன் எனக் கூறியுள்ளார்.
Similar News
News March 14, 2026
விலை மளமளவென குறைந்தது.. 1 கிலோ 8 ரூபாய் மட்டுமே!

சிலிண்டர் தட்டுப்பாட்டால் பல ஹோட்டல்கள் மூடப்பட்டதன் எதிரொலியாக கோயம்பேடு சந்தையில் காய்கறிகள் தேக்கமடைந்துள்ளன. இதனால், அவற்றின் விலை சரசரவென குறைந்துள்ளது. தக்காளி 1 கிலோ ₹8 முதல் ₹15 வரையே விற்கப்பட்டு வருகிறது. உருளை(₹15), கேரட்(₹30), புடலங்காய்(₹15), வெண்டை(₹30), அவரை(₹15) விலையும் கணிசமாக குறைந்துள்ளது. திருச்சி, கோவை உள்ளிட்ட நகரங்களிலும் காய்கறி விலை சரிந்துள்ளது. உங்க ஊரில் எப்படி?
News March 14, 2026
தொகுதிக்கு ₹5 கோடி செலவு.. தவெக மா.செ.,க்கள் ஷாக்

நேற்று புஸ்ஸி ஆனந்த் நடத்திய கூட்டத்தில் தவெக மா.செ-க்கள் தெரிவித்த கருத்துக்கள் தொடர்பான தகவல் கசிந்துள்ளது. *ஒவ்வொரு தொகுதிக்கும் தேர்தல் செலவுக்கு குறைந்தது ₹5 கோடி தேவைப்படும் *அவ்வளவு பெரிய தொகையை செலவு செய்யக்கூடிய வேட்பாளர்கள் கட்சியில் இல்லை *மக்களுக்கு பரிச்சயமான வேட்பாளர்களை கண்டறிவதில் சிக்கல் என கூறினராம். இதனால் தான் 90% மா.செ.,க்கள் கூட்டணிக்கு செல்லலாம் என தெரிவித்துள்ளனர்.
News March 14, 2026
தள்ளுபடி.. CM ஸ்டாலின் சர்ப்ரைஸ் அறிவிப்பு

வணிக சிலிண்டர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள நிலையில், மின் அடுப்புகளை பயன்படுத்தும் உணவகங்களுக்கு தமிழக அரசு சர்ப்ரைஸ் மானியம் அறிவித்துள்ளது. சிலிண்டர் பிரச்னை உள்ளவரை ஹோட்டல்கள், டீ கடைகளுக்கு மின்சாரம் யூனிட்டுக்கு ₹2 மானியம் வழங்கப்படும் என்றும், வீடுகளில் சமைத்து உணவு விற்போருக்கும் இந்த மின் கட்டண சலுகை பொருந்தும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.


