News August 24, 2025
சிவகங்கை மாவட்ட ரயில் பயணிகளுக்கு..

சிவகங்கை: குருவாயூரிலிருந்து – சென்னைக்கு ஆகஸ்ட் 27,28,29, 30 ஆகிய தேதிகளில் இரவு 23:15 மணிக்கு புறப்படும் ரயில் எண்:16128, குருவாயூர் – சென்னை எக்மோர் எக்ஸ்பிரஸ் வழக்கமான பாதையான சோழவந்தான், திண்டுக்கல் வழியாக செல்லாது. மாற்று பாதையாக மானாமதுரை, சிவகங்கை, காரைக்குடி ரயில் நிலையங்களில் நின்று சென்னை எக்மோர் செல்லும் என தெற்கு ரயில்வே அறிவித்தள்ளது.
Similar News
News August 24, 2025
சிவகங்கை: ஆக.26ல் உங்களுடன் ஸ்டாலின் முகாம்

உங்களுடன் ஸ்டாலின் சிறப்பு திட்ட முகாம் ஆக.26ம் தேதி சிவகங்கை மாவட்டத்தில் தேவகோட்டை, சாக்கோட்டை, காளையார்கோவில், சிவகங்கை, திருப்புவனம், திருப்பத்தூர் ஊராட்சி பகுதிகளில் நடைபெறுகிறது. நகர்புறத்தில் 13 துறைகள் மூலம் 43 சேவைகளும், கிராமப்புறத்தில் 15 துறைகள் மூலம் 46 சேவைகளும் வழங்கப்படும். சொத்து வரி, குடிநீர், சான்றிதழ்கள் உள்ளிட்ட சேவைகள் உடனடியாக வழங்கப்படவுள்ளன.
News August 24, 2025
சிவகங்கை மாவட்ட இரவு ரோந்து காவலர்கள் விவரம்

சிவகங்கை மாவட்டத்தில் இன்று (ஆக.24) இரவு 10 மணி முதல் மறுநாள் காலை 6 மணி வரை ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட காவல் அதிகாரிகள் தொடர்பு எண்கள் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. பொதுமக்கள் அவசர காலத்திற்கு அவர்களை அழைக்கலாம், அல்லது 100 ஐ டயல் செய்து தங்கள் தேவையை பூர்த்தி செய்யலாம் என சிவகங்கை மாவட்ட காவல் துறை அறிவித்துள்ளது.
News August 24, 2025
வானில் நடைபெறும் அதிசயத்தைக் காண அழைப்பு

தமிழ்நாடு அறிவியல் இயக்க சிவகங்கை மாவட்டச் செயலாளர் ஆரோக்கியசாமி செப்.7ஆம் தேதி இரவு வானில் நடைபெறும் அதிசயத்தை காண அழைப்பு விடுத்துள்ளார். இந்திய வானியற்பியல் நிறுவனத்தின் தகவல்களின்படி சூரியனுக்கும் சந்திரனுக்கும் இடையில் பூமி வரும்போது சந்திர கிரகணம் ஏற்படுகிறது. இதனால் பூமியின் நிழல் சந்திரனில் விழுகிறது. இது ஒரு இயற்கையான நிகழ்வு என்று அழைப்பு விடுத்துள்ளார்.