News August 24, 2025

ஏர்டெல் வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி

image

இன்று காலை 10 மணியில் இருந்து Airtel நெட்வொர்க் சேவை ஹைதராபாத் உள்ளிட்ட இடங்களில் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக சுமார் 7,000 பேர் X உள்ளிட்ட சோஷியல் மீடியாக்கள், ஏர்டெல் சேவை மையங்களில் புகாரளித்து வருகின்றனர். இதனையடுத்து, சேவையை மீட்டெடுக்க நிறுவனம் தொடர்ந்து முயற்சித்து வருகிறது. முன்னதாக, கடந்த வாரமும் சில இடங்களில் ஏர்டெல் நெட்வொர்க் சேவை பாதிக்கப்பட்டது.

Similar News

News August 25, 2025

ஆம்னி பஸ் கட்டண உயர்வால் பயணிகள் அவதி

image

வி​நாயகர் சதுர்த்தி விடு​முறையையொட்டி ஆம்னி பஸ் கட்​ட​ணம் அதி​கரிக்​கப்​பட்​டுள்​ள​தாக பயணி​கள் குற்​றம்​சாட்​டி​யுள்​ளனர். 27-ம் தேதி ஒருநாள் விடுமுறையாக இருந்தாலும், மேலும் 2 நாள் விடுப்பு எடுத்து சொந்த ஊர்​களுக்கு பயணிக்க பலர் தயா​ராகி​விட்​டனர். இதைப் பயன்​படுத்தி சென்னையில் இருந்து வெளியூர் செல்லும் ஆம்னி பஸ்களில், 3 மடங்கு அதிக கட்டணம் வசூலிக்கப்படுவதாக பயணிகள் வேதனை தெரிவிக்கின்றனர்.

News August 25, 2025

வரலாற்றில் இன்று

image

1952 – நடிகரும் தேமுதிக நிறுவனருமான விஜயகாந்த் பிறந்தநாள்
1994 – மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத் பிறந்தநாள்
1998 – தனுஷ்கோடி அருகே அகதிகளின் படகு கவிழ்ந்ததில் 45 பேர் பலி
2012 – நிலவில் முதன்முதலாக கால் பதித்த நீல் ஆம்ஸ்ட்ராங் நினைவு நாள்

News August 25, 2025

நான் SK-வின் certified ஃபேன் கேர்ள்: ருக்மினி

image

மதராஸி படம் தன் மனதுக்கு நெருக்கமான படம் என்று நடிகை ருக்மினி வசந்த் தெரிவித்துள்ளார். தனக்கு தொடக்க காலத்திலேயே, அன்பை அள்ளிக்கொடுக்கும் தமிழ் ரசிகர்களுக்கு நன்றி எனவும், மதராஸி இசை வெளியீட்டு விழாவில் கூறியுள்ளார். தனக்கு வாய்ப்பளித்த இயக்குநர் முருகதாஸுக்கு நன்றி சொல்லிய அவர், தான் SK-வின் certified ஃபேன் கேர்ள் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

error: Content is protected !!