News August 24, 2025
ராமநாதபுரத்தில் Hydro-Carbon சோதனைக்கு அனுமதி

ராமநாதபுரத்தில் ஹைட்ரோகார்பன் சோதனை கிணறுகளை அமைக்க எதிர்ப்பு தெரிவித்துவரும் நிலையில் ஓஎன்ஜிசி நிறுவனத்துக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. 2023-ல் ஓஎன்ஜிசி விண்ணப்பித்திருந்த நிலையில், தற்போது 20 இடங்களில் எண்ணெய் கிணறுகள் அமைக்க மாநில சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு ஆணையம் ஓப்புதல் அளித்துள்ளது. இயற்கை வளங்கள் அழிப்பு, உடல்நல பாதிப்பு குறித்த கவலையால் இதற்கு கடும் எதிர்ப்புகள் உள்ளது
Similar News
News August 25, 2025
இன்றைய நல்ல நேரம்

▶ஆகஸ்ட் 25, ஆவணி 26 ▶கிழமை: திங்கள் ▶நல்ல நேரம்: 6:15 AM – 7:15 AM & 4:45 PM – 5:45 PM ▶கெளரி நல்ல நேரம்: 9:00 AM – 10:00 AM & 7:30 PM – 8:30 PM ▶ராகு காலம்: 7:30 AM – 9:00 AM ▶எமகண்டம்: 10:30 AM – 12:00 PM ▶குளிகை: 1:30 PM – 3:00 PM ▶திதி: துவிதியை ▶சூலம்: கிழக்கு ▶பரிகாரம்: தயிர் ▶பிறை: வளர்பிறை
News August 25, 2025
SKவுடன் என்றும் துணை நிற்பேன்: அனிருத் நெகிழ்ச்சி

மதராஸி படத்தில் சிவகார்த்திகேயனின் வேறு ஒரு அவதாரத்தை பார்ப்பீர்கள் என அனிருத் தெரிவித்துள்ளார். மதராஸி இசைவெளியீட்டு விழாவில் பேசிய அவர் SK இன்னைக்கு இந்த உயரத்துக்கு வளர்வதற்கு அவரின் தூய்மையான உள்ளமே காரணம் எனவும் அனிருத் நெகிழ்ந்துள்ளார். என்னைக்கோ ஒரு நாள் நான் field out ஆவேன் என கூறிய அவர் அன்னைக்கு எஸ்.கே-வோட வெற்றியை எண்ணி சந்தோஷப்படுவேன் என மகிழ்ச்சியுடன் கூறியுள்ளார்.
News August 25, 2025
ADMK செய்தது மனிதநேயமற்ற செயல்: செல்வப்பெருந்தகை

திருச்சி <<17507617>>துறையூரில் அம்புலன்ஸை<<>> அதிமுகவினர் தடுத்து நிறுத்திய சம்பவம் மனிதநேயமற்ற செயல் என செல்வப்பெருந்தகை கண்டனம் தெரிவித்துள்ளார். அதிமுகவின் இந்த மிரட்டல் அரசியலை தமிழக மக்கள் ஒருபோதும் மன்னிக்கமாட்டார்கள் என்றும் X தளத்தில் பதிவிட்டுள்ளார். இதில் சம்பந்தப்பட்டவர்களுக்கு எதிராக உடனடி சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் எனவும் அரசுக்கு அவர் வலியுறுத்தியுள்ளார்.