News August 24, 2025
சுனில் கவாஸ்கருக்கு மும்பை கிரவுண்டில் ஆளுயர சிலை!

மும்பை வான்கடே மைதானத்தில், இந்திய கிரிக்கெட் அணியின் Ex ஜாம்பவான் சுனில் கவாஸ்கருக்கு சிலை வைக்கப்பட்டுள்ளது. 1972- 1987 வரை இந்திய அணிக்காக விளையாடிய சுனில் கவாஸ்கர், டெஸ்ட் கிரிக்கெட்டில் 10,000 ஆயிரம் அடித்த முதல் வீரர், அதிக டெஸ்ட் சதங்களை(34) அடித்தது என தனது காலக்கட்டத்தில் பல சாதனைகளுக்கு சொந்தக்காரராக இருந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
Similar News
News August 25, 2025
இராமநாதபுரம் மாவட்ட காவல்துறை இரவு ரோந்து பணி விவரம்

ராமநாதபுரம் மாவட்ட காவல்துறை சார்பில் இன்று (24-08-2025) இரவு 10:00 மணி முதல் நாளை காலை 6:00 மணி வரை சட்டம் ஒழுங்கைப் பேணுவதற்காக இரவு ரோந்து பணிக்கு அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். அவசரநிலை அல்லது சந்தேகத்திற்கிடமான நடவடிக்கைகளை எதிர்கொண்டால், பொதுமக்கள் உடனடியாக காவல்துறை உதவி எண் 100-ஐ தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். *உங்களுக்கு தெரிந்தவர்களுக்கு இதை ஷேர் பண்ணுங்க*
News August 25, 2025
திமுக ஆட்சியில் விவசாயிகள் பாதிப்பு: இபிஎஸ்

திமுக ஆட்சியில் விவசாயிகளுக்கு எவ்வித நன்மையும் இல்லை என இபிஎஸ் விமர்சித்துள்ளார். திருச்சியில் பரப்புரை மேற்கொண்ட அவர், அதிமுக ஆட்சி காலத்தில் 5 ஆண்டுகளில் 2 முறை விவசாய கடன் தள்ளுபடி செய்யப்பட்டதாக தெரிவித்துள்ளார். அதிமுக ஆட்சியில் விவசாயிகள் நன்மை அடைந்ததாகக் குறிப்பிட்ட அவர், மீண்டும் ஆட்சிக்கு வந்தால் காவிரி, கொள்ளிடம் ஆற்றில் தடுப்பணைகள் கட்டப்படும் என உறுதியளித்தார்.
News August 25, 2025
ராசி பலன்கள் (25.08.2025)

➤ மேஷம் – சோர்வு ➤ ரிஷபம் – செலவு ➤ மிதுனம் – சாதனை ➤ கடகம் – அமைதி ➤ சிம்மம் – நட்பு ➤ கன்னி – மகிழ்ச்சி ➤ துலாம் – வரவு ➤ விருச்சிகம் – தடங்கல் ➤ தனுசு – நலம் ➤ மகரம் – களிப்பு ➤ கும்பம் – சுகம் ➤ மீனம் – மேன்மை.