News August 24, 2025
யூத அரசுக்கு எதிரான நவீன அவதூறு: இஸ்ரேல் தாக்கு

காசாவுக்குள் மனிதநேய உதவிகளை இஸ்ரேல் தடுத்து வருவதாக ஐ.நாவின் IPC அறிக்கை வெளியிட்டது. இந்நிலையில், இது முழுக்க முழுக்க பொய் என்றும், யூத அரசுக்கு எதிரான நவீன ரத்தம் மிகுந்த அவதூறு என்றும் இஸ்ரேல் PM பெஞ்சமின் நெதன்யாகு காட்டமாக கூறியுள்ளார். காசாவில் உள்ள ஒருவருக்கு ஒரு டன் வீதம் 2 மில்லியன் டன் உதவிப் பொருள்களை அனுமதித்துள்ளதாகவும் அவர் X தளத்தில் குறிப்பிட்டுள்ளார்.
Similar News
News March 21, 2026
இரட்டை இலைக்கு No.. கறாராக பேசுகிறாரா TTV?

டெல்லியில் அமித்ஷாவை TTV தினகரன் சந்தித்துள்ளார். தொகுதிப் பங்கீடு பற்றி அவர் ஆலோசிப்பார் என எதிர்பார்க்கப்படும் நிலையில், இரட்டை இலை சின்னத்தில் அமமுகவை போட்டியிட வைக்க அதிமுக வலியுறுத்தியதாக கூறப்பட்டது. ஆனால், அமமுக வேட்பாளர்கள் குக்கர் சின்னத்திலேயே போட்டியிடுவோம் என்பதில் TTV உறுதியாக இருப்பதாக தெரிகிறது. அத்துடன், இரண்டு இலக்க தொகுதிகள் வேண்டும் என்பதிலும் அவர் விடாப்பிடியாக உள்ளாராம்.
News March 21, 2026
கரண்ட் பில் அதிகமா வருதா? மீட்டரில் இத செக் பண்ணுங்க!

EB மீட்டர் வேகமாக இயங்குகிறது என சந்தேகம் இருந்தால், இப்படி செக் பண்ணுங்க. லைட், ஃபேன், ஏசி என அனைத்து மின்சாதன பொருள்களையும் Off செய்யவும். கனெக்ஷன்களை Plug-ல் இருந்து அகற்றவும். இப்போதும் EB மீட்டரில் உள்ள சிவப்பு விளக்கு அதிக பிரகாசத்துடன் ஒளிர்ந்தால், வீட்டு வயரிங்கில் கசிவு உள்ளது அல்லது மீட்டர் பழுதடைந்துள்ளது என அர்த்தம். இதனாலும் EB பில் அதிகமாக வரலாம். தாமதிக்காமல் உடனே சரி செய்யுங்க.
News March 21, 2026
திமுக கூட்டணி.. சற்றுமுன் முடிவை அறிவித்தார் திருமா

தொகுதிப்பங்கீடு விவகாரத்தில் திமுக மீது திருமா அதிருப்தி தெரிவித்ததால், திமுக கூட்டணியில் <<19438691>>விசிக <<>>நீடிக்குமா, விலகுமா என்று கேள்வி எழுந்தது. இந்நிலையில், திமுக கூட்டணியில் தொடர்வதாக அவர் தெரிவித்துள்ளார். மேலும் தொகுதிப்பங்கீடு பேச்சுவார்த்தையில் இழுபறி இல்லை எனக்கூறிய அவர், திமுக கூட்டணியில் வேல்முருகன் தொடர வேண்டும் என்றும், CPM கூட்டணி நலனுக்கு எதிராக போகாது எனவும் தெரிவித்துள்ளார்.


