News August 24, 2025

முதல்வரை சந்தித்து வாழ்த்து பெற்ற அமைச்சர்

image

திராவிட முன்னேற்றக் கழக கடலூர் கிழக்கு மாவட்ட செயலாளரும், தமிழக வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சருமான எம்.ஆர்.கே பன்னீர்செல்வம் நாளை ஆக.25-ம் தேதி, தனது 68-வது பிறந்தநாளை கொண்டாட உள்ளார். இந்நிலையில் தமிழ்நாடு முதல்வர் மற்றும் திமுக தலைவர் மு.க. ஸ்டாலினை, நேற்று நேரில் சந்தித்து பிறந்தநாள் வாழ்த்துகள் பெற்றார்.

Similar News

News March 19, 2026

கடலூர் முழுவதும் 403.8 மி.மீ மழை பதிவு!

image

கடலூர் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் பரவலாக விட்டு விட்டு கனமழை பெய்தது. இந்த நிலையில் இன்று (மார்ச் 19) காலை 8.30 மணி நிலவரப்படி கடலூர் மாவட்டம் முழுவதும் 403.8 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது. இதில் புவனகிரி 67 மில்லி மீட்டர், கடலூர் 54 மில்லி மீட்டர், கடலூர் ஆட்சியர் அலுவலகம் 52 மில்லி மீட்டர், சேத்தியாத்தோப்பு 42 மில்லி மீட்டர், எஸ்ஆர்சி குடிதாங்கி 29 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது.

News March 19, 2026

கடலூர்: 33,534 பேர் தபால் வாக்களிக்க ஏற்பாடு!

image

கடலூர் மாவட்டத்தில் உள்ள 9 சட்டமன்ற தொகுதிகளிலும் 13,155 மூத்த குடிமக்கள், 20,379 மாற்றுத்திறனாளிகள் என 33 ஆயிரத்து 534 பேர் உள்ளனர். இவர்கள் தங்கள் வீடுகளில் இருந்த படியே தபால் வாக்குகளை செலுத்துவதற்கான விருப்ப படிவம் நாளை 20 ஆம் தேதி முதல் 24 ஆம் தேதி வரை வழங்கப்பட உள்ளது என கடலூர் மாவட்ட ஆட்சியர் சிபி ஆதித்யா செந்தில்குமார் தெரிவித்துள்ளார்.

News March 19, 2026

கடலூர்: வங்கி வேலை! – கடைசி வாய்ப்பு!

image

IDBI வங்கியில் காலியாக உள்ள Assistant Manager (Grade ‘A’) மற்றும் Junior Assistant Manager (JAM – Grade ‘O’) பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது.

1. வகை: மத்திய அரசு வேலை
2. பணியிடங்கள்: 1300
3. வயது: 21 – 30
4. சம்பளம்: ரூ.36,000 – ரூ.65,000
5. கல்வித் தகுதி: Bachelor Degree
6. கடைசி தேதி: 19.03.2026
7. விண்ணப்பிக்க: CLICK <>HERE<<>>
வேலை தேடுபவர்களுக்கு இந்த தகவலை ஷேர் பண்ணுங்க!

error: Content is protected !!