News August 24, 2025

நாகைக்கு இரண்டு சிறப்பு ரயில்கள் இயக்கம்!

image

வேளாங்கண்ணி பேராலய திருவிழாவை முன்னிட்டு நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏற்கனவே வேளாங்கண்ணிக்கு சிறப்பு ரயில்கள் அறிவிக்கப்பட்டு உள்ளன. இந்நிலையில், மேலும் 2 சிறப்பு ரயில்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. தெலுங்கான மாநிலம் சார்லப்பள்ளியில் இருந்து காட்பாடி, திருவண்ணாமலை, விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம் வழியாக வேளாங்கண்ணிக்கு செப்.4 மற்றும் 5 ஆகிய தேதிகளில் இந்த ரயில் இயக்கப்படுகிறது.

Similar News

News April 3, 2026

நாகை: தேர்தலை புறக்கணிக்கும் கிராம மக்கள்

image

நாகை மாவட்டம் தகட்டூர் ஊராட்சி பெத்தாச்சிகாடு பகுதியில் சுமார் 70 குடும்பங்கள் உள்ள நிலையில், 300 மேற்பட்ட வாக்குகள் உள்ளன. இந்நிலையில் இப்பகுதியில் அடிப்படை வசதி இல்லாமல் அப்பகுதி மக்கள் அவதி அடைகின்றனர். மேலும் இதுகுறித்து புகாரளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என கூறப்படுகிறது. இதனால் அடிப்படை வசதி கள் ஏற்படுத்தி தராவிட்டால் வருகிற தேர்தலை புறக்கணிக்க போவதாக அறிவித்துள்ளனர்.

News April 3, 2026

நாகை நீதிமன்றத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் – பரபரப்பு

image

நாகை புதிய பஸ் நிலையம் எதிரெ நீதிமன்றம் உள்ளது. இங்குள்ள பணிவாளர் அலுவலத்திற்கு மெயில் மூலம் வெடி குண்டு மிரட்டல் வந்துள்ளது. இதுகுறித்து நாகை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்திற்கு தலவல் தெரிவிக்கப்பட்டதை தொடர்ந்து. மோப்ப நாய் உதவியுடன் வெடிகுண்டு நிபுணர்கள் நீதிமன்றத்தில் சோதனை செய்தனர். பின்னர் மெயில் வெறும் மிரட்டலென தெரிய வந்தது. இதுகுறித்து சைபர் க்ரைம் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

News April 3, 2026

நாகை: 2 இடங்களில் ரூ.1.52 லட்சம் பறிமுதல்

image

கீழ்வேளூர் சட்டமன்ற தொகுதியில் புறவழிச் சாலையில் தேர்தல் பறக்கும் படை அதிகாரி கல்யாணக்குமார் தலைமையில் போலீசார் வாகன சோதனையில் மேற்கொண்டனர். அப்போல தேவூர் கடுவையாற்று பலம் அருகே பறக்கும் படை அதிகாரி தேவேந்திரன் தலைமையிலும் போலீசார் சோதனையில் ஈடுபட்டனர். இதில், 2 இடத்திலும் பறிமுதல் செய்யப்பட்ட ரூ.1.52 லட்சத்தை கீழ்வேளூர் சார் நிலை அலுவலகத்தில் ஒப்படைக்கப்பட்டது.

error: Content is protected !!